7 நட்சத்திர ஓட்டலாக மாறிய நிஜாம் அரண்மனை!
7 நட்சத்திர ஓட்டலாக மாறிய நிஜாம் அரண்மனை!
ஹைதராபாத்: 117 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிஜாம் காலத்து அரண்மனை ஒன்று பழையப் பொலிவு மாறாமல் புதிய ஏழு நட்சத்திர ஓட்டலாக மாறியுள்ளது. இந்த அரண்மனையை ஓட்டலாக மாற்றுவதற்காக இதை பொறுப்பேற்று நடத்தும் தாஜ் நிறுவனம் சுமார் பத்து ஆண்டு காலம் எடுத்துக்கொண்டது.
19ம் நூற்றாண்டில் ஐதராபாத்தை ஆண்ட நிஜாம் மெஹ்பூப் அலி கானின் அரண்மனையாக விளங்கியது பலக்நுமா அரண்மனை. இது 1893ம் ஆண்டு கட்டப்பட்டது. ஐதராபாத்தில் முசி ஆற்றங்கரையோரம் சார்மினாரிலிருந்து ஐந்து கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. இத்தாலி மற்றும் வேல்ஸ் நாட்டு கட்டட கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனையை அப்படியே ஓட்டலாக பயன்படுத்தும் நோக்கில் தாஜ் ஓட்டல் நிறுவனம் வாங்கியது.
கொஞ்சம் கூட பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 10 ஆண்டுகளாக புனரமைப்பு பணி நடந்தது. முழுக்க முழுக்க சலவை கற்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனை நிஜாம் காலத்திற்கே அழைத்து செல்கிறது. மொத்தம் 60 அறைகள் உள்ளன. இதில், ஒரு நாள் தங்குவதற்கு ஐந்து லட்ச ரூபாய் வாடகை. இந்தியாவிலேயே அதிக வாடகை வசூலிக்கும் ஓட்டல் இதுவாகத்தான் இருக்கும். இதிலுள்ள மற்ற அறைகள் வாடகை 33 ஆயிரம் ரூபாய். ஓட்டலின் அறைகளும், கூடங்களும் அதீத ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த அரண்மனையின் தர்பார் மண்டபம், 101 இருக்கைகள் கொண்ட டைனிங் ஹாலாக மாற்றப்பட்டுள்ளது. நிஜாம் காலை உணவு சாப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட அறை மாநாட்டு அறையாக மாற்றப்பட்டுள்ளது.இது தாஜ் நிறுவனம் சொகுசு ஓட்டலாக மாற்றியுள்ள நான்காவது அரண்மனையாகும். இந்த அரண்மனை மொத்தம் சுமார் 35 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
நன்றி : இந்நேரம்
» இணையதளம் முடக்கம்-புதிய முகவரிக்கு மாறிய விக்கிலீக்ஸ்
» போராட்ட உணர்வின் நினைவிடமாக மாறிய ஷேக் யாஸீனின் வீடு
» தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக மாறிய அமெரிக்கா-சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்