கேரள ஆளுநரும், முன்னாள் புதுவை மாநிலமுதல்வருமான பரூக் மரைக்காயர் மரணம்
2 posters
Page 1 of 1
கேரள ஆளுநரும், முன்னாள் புதுவை மாநிலமுதல்வருமான பரூக் மரைக்காயர் மரணம்
சென்னை: கேரள மாநில ஆளுநரும், முன்னாள் புதுவை முதல்வருமான பரூக் மரைக்காயர் நேற்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.
புதுச்சேரி மாநில முதல்வராக பரூக் மரைக்காயர் இருந்தபோது அனைத்துத் தரப்பினரின் அன்பையும், மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தார். மூ்ன்று முறை புதுவை முதல்வராக இருந்துள்ள இவர், புதுவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கும் 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். செளதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகவும் இருந்த இவர் 2010-ல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2011 ஆகஸ்ட் 25-ம் தேதி கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கடைசியாக அவர் கேரள மாநில ஆளுநராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் சென்னை அழைத்து வரப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
பரூக் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக புதுவை அமைச்சரவை இன்று கூடுகிறது. அங்கு இன்று அரசு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கேரள மாநிலத்திலும் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கலீல்- New Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 10
ஸ்கோர் : 4730
Points : 8
வயது : 40
எனது தற்போதய மனநிலை :
Re: கேரள ஆளுநரும், முன்னாள் புதுவை மாநிலமுதல்வருமான பரூக் மரைக்காயர் மரணம்
அல்லாஹ்விடமிருந்தே வந்தோம்,அவனிடமே திரும்ப செல்கிறோம்.
Similar topics
» எஸ்.டி.பி.ஐக்கு அதிகரித்த வாக்குகள் கேரள அரசியலில் நிர்ணாயகம்
» 'லவ் ஜிஹாத்' - குற்றச்சாட்டுகளை நிராகரித்து கேரள உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு...
» பா.ஜ.கவினரின் அடாவடி: தமிழக-கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு
» தற்கொலைக்கு தூண்டும் ஐ.பி:முஸ்லிம் பெண்ணை வேட்டையாடும் கேரள போலீஸ்
» முல்லைபெரியாறு – கேரள அரசை கண்டித்து ம.ம.க. வாகனப் பேரணி – 400 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum