"பயங்கரவாதம்" மேட் இன் யூ எஸ் ஏ - ஹிலாரி
Page 1 of 1

சில பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது அமெரிக்காதான் என்றும் ஒஸாமா பின்லேடன் போன்ற பயங்கரவாதிகளை அமெரிக்கா முன்னர் ஆதரித்து வந்தது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன். ஏபிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது ஒப்புக் கொண்டார்.
சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா இவ்வாறு செய்தது. ஆனால் இவ்வாறு செய்தது அமெரிக்காவுக்கே பெரும் பிரச்சனையாகிப் போனது என்று ஹிலாரி கூறினார்.
நாம் இப்போது யாருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அவர்களில் ஒரு பகுதியினர் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்கள். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்காக முஜாஹிதீன் படையினரை நாம்தான் உருவாக்கினோம் என்றும் அவர் கூறினார்.
நாம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தோம்; அவர்களுக்கு ஆயுதம் வழங்கினோம்; அவர்களுக்கு நிதி உதவியும் அளித்தோம். உஸாமா பின் லேடன் உள்ளிட்ட சிலருக்கு இவை வழங்கப்பட்டன. ஆனால் இது நமக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்றும் ஹிலாரி கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு ஆதரவு அளித்தமைக்காக பாகிஸ்தான் மிகப்பெரிய விலையைக் கொடுத்துக் கொண்டுள்ளது. "பாகிஸ்தான் தன்னுடைய நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு சில நெளிவுகளைச் செய்தது. ஆனால் அதற்காக பாகிஸ்தான் தற்போது மிகப்பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டுள்ளது" என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
நன்றி : இந்நேரம்

Similar topics
» விக்கிலீக்ஸ் விவகாரம்: உலகத் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்த ஹிலாரி!
» எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்
» வலதுசாரி பயங்கரவாதம் ஆபத்தானது:ப.சிதம்பரம் எச்சரிக்கை
» ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதியின் கொள்கை பிரகடனம் – அம்பலமாகும் சர்வதேச பயங்கரவாதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum