ஹிந்தி சினிமாவை பார்த்து ஆசிரியை கொலையை செய்தேன் – மாணவன் வாக்குமூலம்
Page 1 of 1

சென்னை:ஹிந்தி திரைப்படமான
‘அக்னிபாத்’தில் இடம்பெற்றுள்ள வன்முறை காட்சிகள் மூலம் உந்தப்பட்டு
ஆசிரியையை கொலைச் செய்தேன் என கைது செய்யப்பட்ட பள்ளி மாணவன் வாக்குமூலம்
அளித்துள்ளான்.
சென்னை பாரி முனையில் புனித மேரி மேல்
நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு பயிலும் மாணவன் கடந்த வியாழக்கிழமை தனது
ஆசிரியை உமா மகேஷ்வரியை கத்தியால் குத்தி கொலைச் செய்தான். இச்சம்பவம்
மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார்
ரகசிய இடத்தில் வைத்து பல மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்பொழுது மாணவன்
கூறியது:
நான் எனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால்
அவர்களுக்கு செல்லப் பிள்ளையாக இருந்தேன். தினமும் 100 ரூபாய் முதல் 200
ரூபாய் வரை பாக்கெட் மணி கிடைக்கும். ஹிந்தி எனக்கு சரியாக புரியாது.
ஆதலால் ஹிந்தி பாடத்தில் எனக்கு மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும். இதனை
எனது ஸ்கூல் டைரியில் எழுதி பெற்றோர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி வர
ஆசிரியை உமா மகேஷ்வரி கூறினார். தொடர்ச்சியாக 13 தடவை இவ்வாறு டைரியில்
எழுதினார். கடந்த மாதமும் டைரியில் என்னைப் பற்றி மோசமாக அறிக்கை
எழுதியதால் பெற்றோர்கள் என்னை கண்டித்தனர். இதனால் ஆசிரியை மீது எனக்கு
கோபம் ஏற்பட்டது.
மூன்று தினங்களுக்கு முன்பு தியேட்டருக்கு
சென்று ‘அக்னிபாத்’ என்ற ஹிந்தி சினிமாவை பார்த்தேன். அதில் வரும் கொலைக்
காட்சிகளைப் போல உமா மகேஷ்வரியையும் கொலைச் செய்ய திட்டமிட்டேன்.
வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் இருந்து ரூ.20 கொடுத்து கத்தி ஒன்றை
வாங்கினேன். அதனை காகிதத்தில் பொதிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றேன்.
சினிமாவில் கண்டது போல ஆசிரியையின் கழுத்திலும், நெஞ்சிலுமாக ஐந்து
இடங்களில் கத்தியால் குத்தினேன். இவ்வாறு மாணவன் வாக்குமூலம்
அளித்துள்ளான்.
கொலைச் செய்த மாணவனுக்கு நண்பர்கள் யாரும்
இல்லை என்றும், யாரிடமும் பேசாத குணமுடையவன் என்றும் போலீசார்
கூறுகின்றனர். உடல் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் அவனது வயதை உறுதிச்செய்ய
மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் ஜுவைனைல் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்திவிட்டு ரிமாண்ட் செய்து சிறுவர்கள் சிறையில் மாணவன்
அடைக்கப்பட்டான். கொலைச் செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஷ்வரியின் உடல்
வெள்ளிக்கிழமை சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது.

Similar topics
» திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்
» முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
» இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வெறியாட்டம் - பலஸ்தீன் இளம்பெண் வாக்குமூலம்
» சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!
» ‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum