குல்பர்கா கூட்டுப் படுகொலை: எஸ்.ஐ.டி அறிக்கையை ஸாகியாவுக்கு அளிக்க நீதிமன்றம் ஒப்புதல்
Page 1 of 1

அஹ்மதாபாத் குஜராத் இனப்படுகொலையின் போது மிகவும் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட குல்பர்கா சொஸைட்டி கூட்டுப் படுகொலை தொடர்பான சிறப்புபுலனாய்வு குழுவின் அறிக்கை நகலை புகார் அளித்த ஸாகியா ஜாஃப்ரிக்கு அளிக்க தயார் என்று அஹ்மதாபாத் மெட்ரோ பாலிடன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002 பிப்ரவரி 27-ஆம் தேதி குல்பர்க் சொஸைட்டியில் நடந்த கொடூர கூட்டுப் படுகொலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டனர். இவ்வழக்கில் மோடி மற்றும் முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பங்கினை குறித்து விசாரணை நடத்தக்கோரி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி அளித்த புகார் மனுவை தொடர்ந்து உச்சநீதிமன்றம் விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது.
இந்நிலையில் எஸ்.ஐ.டியின் அறிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வறிக்கையில் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சில ஊடக தகவல்கள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து டீஸ்டா ஸெடல்வாட், முகுல் சின்ஹா ஆகிய சமூக ஆர்வலர்களும், மனுதாரரான ஸாகியா ஜாஃப்ரியும் எஸ்.ஐ.டி அறிக்கையின் நகலை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். ஆனால், எஸ்.ஐ.டியின் வழக்கறிஞர் மூன்றாவது தரப்பினருக்கு நகலை அளிக்க முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் கூட்டுப் படுகொலை தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மார்ச் 15-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாஜிஸ்ட்ரேட் எஸ்.எம்.பட் உத்தரவிட்டுள்ளார். அதற்கு பிறகே ஸாகியாவுக்கு நகல் வழங்கப்படும். அதேவேளையில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு அறிக்கையின் நகலை வழங்க தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Similar topics
» நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: எஸ்.ஐ.டிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
» ஹதீஸா கூட்டுப் படுகொலை: அமெரிக்க ராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ப்ரெவிக்குடன் தொடர்பு:பிரிட்டீஷ் அமைப்பு ஒப்புதல்
» ஃபலஸ்தீனில் தேர்தல் நடத்த ஃபத்ஹ்-ஹமாஸ் ஒப்புதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum