மக்கா மசூதி குண்டு வெடிப்பு: சுவாமி ஆசிமானந்தாவிடம் சிபிஐ விசாரணை!
Page 1 of 1

2007ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மசூதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தாவிடம் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.
2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி ஹைதாராபத் மக்கா மசூதியில் வெள்ளிக் கிழமையன்று முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது வெடிகுண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் நபா குமார் என்ற இயற்பெயரை உடைய சுவாமி ஆசிமானந்தாவை சிபிஐ தேடி வந்தது. 2008ஆம் ஆண்டு முதல் சிபிஐயின் பிடியில் சிக்காமல் தப்பி வந்த ஆசிமானந்தா நவம்பர் 19ஆம் தேதி ஹரித்வாரில் கைது செய்யப்பட்டார்.
ஆசிமானந்தாவை ஹைதராபாத் கூடுதல் தலைமை மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன் சனிக்கிழமையன்று ஆஜர்படுத்தப்படுத்திய சிபிஐ, இவரிடம் விசாரணை செய்வதற்காக தங்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதியிடம் கோரியது. இதனையடுத்து 7 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சுவாமி ஆசிமானந்திடம் மேலும் விசாரணை செய்வதற்காக குஜராத், டில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிபிஐ அழைத்துச் செல்லும் என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள சந்தீப் டாங்கே மற்றும் ராமசந்திர கல்சங்ரா என்ற ராம்ஜி ஆகியோரது இருப்பிடம் குறித்து ஆசிமானந்திடம் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என இதுவரை வலதுசாரி இந்து அமைப்புகளைச் சார்ந்த ஐந்துபேரை சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகவும் சிபிஐ மற்றும் மகாராஷ்டிர மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை சுவாமி ஆசிமானந்தைத் தேடி வந்தது குறிப்பிடத் தக்கது.
இந்நேரம்

Similar topics
» அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் கைது!
» மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு
» அத்வானி பாதை குண்டு: கைது செய்யப்பட்டவர் சிபிஐ விசாரணை கோரி மனு!
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு எதிராக சிபிஐ மனு!
» மணிப்பூரில் சக்தி வாய்ந்து குண்டு வெடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum