ராகுல் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!
ராகுல் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!
இந்து தீவிரவாதிகள் பற்றிய ராகுல் காந்தியின் கருத்து, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு விழுந்த பலத்த அடி என்று பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கடும் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது-
ராகுலின் இந்த கருத்து பொறுப்பற்றது. அமெரிக்க அரசு இந்த தகவலை மறுக்கவோ அல்லது உறுதி செய்யவோ இல்லை. எனவே இதை ஒப்புக்கொண்டதாகத்தான் அர்த்தம். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பலத்த அடியாக அவருடைய கருத்து அமைந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக இது அமைந்துள்ளது. மும்பையில் நடைபெற்ற தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்து தீவிரவாதம்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அவருக்கு தோன்றுகிறதா? அப்படியென்றால் இந்தியாவைப்பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் எதுவும் அறியாதவர் ராகுல் என்றுதான் அர்த்தம்.
இப்படிப்பட்ட ஒரு கருத்தை இந்திய நாடாளுமன்றத்திலோ அல்லது இந்தியாவில் எங்குமோ சொல்லாமல், வெளிநாட்டுத் தூதர் ஒருவரிடத்திலா அவர் தெரிவிப்பது? இந்த விவகாரத்தை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திலும், மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வோம்.
மாவோயிஸ்டு தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் ராகுலின் இந்த கருத்து அவர் இந்தியாவைப்பற்றி எந்த அளவுக்கு குறைவாக அறிந்து இருக்கிறார் என்பதையே உணர்த்துகிறது''.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
இந்நேரம்
» மோடிக்கு ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கடும் கண்டனம்!
» இஸ்ரேல்-இந்தியா ஒப்பந்தம்: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்
» பாகிஸ்தான் கைதிகள்:மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
» டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்