தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையில்லை!

Go down

  விக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையில்லை!   Empty விக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையில்லை!

Post by முஸ்லிம் Sun Dec 19, 2010 4:59 pm

இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை; அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பியதாக விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார். சானியா மிர்சா, ஷாருக்கான் போன்றவர்கள் இந்திய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவை அவமதிக்கும் நிகழ்ச்சி: பி.பி.சி மீது இந்திய ஹைக்கமிஷன் புகார்
» முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுரை:சுப்ரமணிய சுவாமியின் மீது வழக்கு தொடர சிறுபான்மை கமிஷன் முடிவு
» ஃபேஷன் விஷயங்கள் குறித்து முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்ட இந்திய ஊடகங்கள் மீது பாக். அமைச்சர் ஹினா கோபம்!
» இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – கொல்லப்பட்ட ஜாவேதின் தந்தை கோரிக்கை
»  விக்கிலீக்ஸ்: ராஜபக்சே போர்க்குற்றவாளி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum