வெங்காயத்துக்குப் பதில் பருத்தி - இந்தியா முடிவு!
Page 1 of 1

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தரை வழியாகவும் ரயில் வழியாகவும் வெங்காய ஏற்றுமதியை அனுமதித்தால் பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவோம் என்று பாகிஸ்தானிடம் இந்தியா கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரீசலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் அதற்குப் பதிலாக இந்தியாவுக்கு தரை வழியாக வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய வணிகத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. எனவே, வெங்காய விலை சற்று குறையத் தொடங்கியது. ஆனால், இந்தியாவுக்குத் தரை வழியாக வெங்காயம் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு ஜனவரி 6ஆம் தேதி தடை விதித்ததைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலை ரூ. 60 முதல் ரு. 70 வரை என மீண்டும் உயர்ந்தது.
தற்போது இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவில் சுமார் 3 ஆயிரம் டன் எடையுள்ள வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு 300 லாரிகள் காத்திருக்கின்றன.
பருத்தி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ஜவுளித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்நேரம்

Similar topics
» ஈரானுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா முடிவு
» சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா
» கேள்வி - பதில்
» தடைக்கு பதில் தடை: ஈரான்
» முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது: 'ஜெ'வுக்குக் கருணாநிதி பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum