நடுக்கடலில் கடத்தப்பட்ட பலஸ்தீன் மீனவர்கள்
Page 1 of 1
நடுக்கடலில் கடத்தப்பட்ட பலஸ்தீன் மீனவர்கள்
கடந்த புதன்கிழமை (19.01.2011) நள்ளிரவில் காஸா பிராந்தியத்தின் தென்பகுதியான கான் யூனுஸை அடுத்துள்ள கடற்பரப்பில் வைத்து நான்கு பலஸ்தீன் மீனவர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையினர் பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளனர் என்று காஸாவின் விவசாய அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி அமைச்சின் மீன்பிடித் திணைக்களம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையினர் பலஸ்தீனர்களின் மீன்பிடிப் படகினைத் தாக்கி, அதில் இருந்த மீனவர்களை மீன்பிடிப் படகுகளுடன் கடத்திச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கடத்தப்பட்ட மீனவர்களுள் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மீன்பிடிப் பருவகால ஆரம்பத்திலும் பலஸ்தீன் மீனவர்கள் மீது அடாவடியாகத் தாக்குதல் நடாத்துவதும், மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்துவதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வழக்கம் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்டுள்ள பலஸ்தீன் மீனவர்களின் உயிர்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும் என்று பலஸ்தீன் விவசாய அமைச்சு வலியுறுத்தியுள்ளதோடு, இது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் என்பன உடனடியாகத் தலையிட்டு, மேற்படி மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
காஸாவில் உள்ள பலஸ்தீன் மீனவர்களுக்காகத் தற்போது வரையறுக்கப்பட்டுள்ள மீன்பிடிக் கடற்பரப்பு எந்தவகையிலும் போதுமானது இல்லை என்பதால், மீன்பிடிக்கும் கடல் எல்லையைச் சற்று விசாலப்படுத்துவதற்கு முன்வருமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபைமீது சர்வதேச சக்திகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் பலஸ்தீன் விவசாய அமைச்சு வேண்டியுள்ளது.
இந்நேரம்
இந்நேரம்
Similar topics
» பலஸ்தீன் பயிர்நிலங்களுக்குத் தீவைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள்
» பலஸ்தீன் மஸ்ஜிதைத் தாக்கிய யூத ஆக்கிரமிப்பாளர்கள்
» பலஸ்தீன் ஆசிரியையை எரித்துக் கொல்லமுயன்ற யூத ஆக்கிரமிப்பாளர்கள்
» 13 வயது பலஸ்தீன் சிறுமி கைது
» கெய்ரோவில் பலஸ்தீன் ஆதரவு பேரணி
» பலஸ்தீன் மஸ்ஜிதைத் தாக்கிய யூத ஆக்கிரமிப்பாளர்கள்
» பலஸ்தீன் ஆசிரியையை எரித்துக் கொல்லமுயன்ற யூத ஆக்கிரமிப்பாளர்கள்
» 13 வயது பலஸ்தீன் சிறுமி கைது
» கெய்ரோவில் பலஸ்தீன் ஆதரவு பேரணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum