நோன்பு கஞ்சி
Page 1 of 1
நோன்பு கஞ்சி
தேவையானவை
- 1. அரிசி நொய் - 1/2 கப்
- 2. சிறு பருப்பு - 1/4 கப்
- 3. வெங்காயம் - 1/2
- 4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- 5. எண்ணெய் - 1 தேக்கரண்டி
- 6. தேங்காய் பால் - 1/2 கப்
- 7. கொத்தமல்லி இலை
- 8. புதினா இலை
- 9. உப்பு
- 10. பூண்டு பல் - 10
- பொடிக்க:
- 1. மிளகு - 1 தேக்கரண்டி
- 2. சீரகம் - 1 தேக்கரண்டி
- 3. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
- 4. சோம்பு - 1/4 தேக்கரண்டி
- 5. ஏலக்காய் - 1
- 6. பட்டை - 1 துண்டு
- 7. லவங்கம் - 4
செய்முறை
பொடிக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் பொடி செய்யவும்.
குக்கரில் அரிசி நொய், பருப்பு, பூண்டு பல், கொத்தமல்லி புதினா இலை, பொடித்த தூள், 7 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இத்துடன் வேக வைத்த கஞ்சி, தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுக்கவும்.
குறிப்பு:
விரும்பினால் சிக்கன் அல்லது ஆட்டுக்கறி சேர்த்தும் செய்யலாம்.
நன்றி : அறுசுவை
Similar topics
» நோன்பு கஞ்சி - ஒரு நபருக்கு 150 கிராம் அரிசி வழங்க முதல்வர் உத்தரவு!
» அரஃபா நோன்பு
» ரமளானில் 21 மணி நேரம் நோன்பு நோற்கும் முஸ்லிம்
» முஹர்ரம்(பத்தாவது நாள்)ஆஷூரா நோன்பு
» அரஃபா நோன்பு
» ரமளானில் 21 மணி நேரம் நோன்பு நோற்கும் முஸ்லிம்
» முஹர்ரம்(பத்தாவது நாள்)ஆஷூரா நோன்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum