இணைய அனுபவத்தை Firefox'ல் எளிதாக்கும் "Foxtab"
Page 1 of 1
இணைய அனுபவத்தை Firefox'ல் எளிதாக்கும் "Foxtab"
இணையத்தில் உலவும் அனைவரும் கண்டிப்பாக ஒரு நாளைக்கு குறைந்தது 20 - 25 இணைய முகவரிக்கு சென்று தகவல்களை பெறுவோம். சில சமயம் நம்மை அறியாமலே மிகவும் ஆர்வத்துடன் பல நல்ல தளங்களுக்கு சென்று இருப்போம். சில தளங்களில் உள்ள நல்ல விஷயங்கள் காரணமாக அதை நமது ப்ரௌசெரில் Bookmark செய்து வைத்து கொள்வோம். இதனால் சில சமயங்களில் நமது புக்மார்க்கில் நம்மை அறியாமலே பல இணைய முகவரிகள் சில நாட்களிலே குவிந்து விடும். பின்பு ஒவ்வொரு முகவரியாக சென்று பார்த்து அது நமக்கு இப்பொது உபயோகம் ஆகிறதா என்று பார்போம். இதனால் நமது நேரம் மிகவும் செலவு ஆகும். இது ஒரு பிரச்னை என்றால், அடுத்த பிரச்னை நாம் ஒரே நேரத்தில் பல இணையத்தளங்களில் உலவி கொண்டிருக்கும் போது நம்மை அறியாமல் ப்ரௌசெரை முடி விடுவோம். இதனால் அனைத்து தளங்களையும் நாம் பிரௌசரின் வரலாற்றில் (History) இருந்து எடுப்போம். இதுவும் ஒரு அசௌகரியமான வேலை. எனவே நமது இணைய அனுபவத்தை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சேவைதான் FoxTab.
இந்த சேவையை Firefox ப்ரௌசெரில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சேவையின் மூலம் நமது ப்ரௌசெர் வரலாற்றை 3-D அனுபவத்தை கொண்டு இணையதளங்களை உலவலாம். இந்த சேவையை இந்த Addon லிங்கை உபயோகித்து உங்கள் firefox'இல் இணைத்து கொள்ளுங்கள். மேலும் இந்த சேவையை பற்றி அறிந்து கொள்ள http://www.foxtab.com/gettingstarted/ தளத்திருக்கு செல்லவும்.
நன்றி : Ivan's Blog
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum