உங்கள் வலைப்பதிவை நொடியில் டிசைன் செய்ய..
உங்கள் வலைப்பதிவை நொடியில் டிசைன் செய்ய..
இணையத்தில் நாம் ஒரு வலைபதிவையோ, இணைய பக்கத்தையோ டிசைன் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது நமக்கு HTML கோடிங்காவது தெரிய வேண்டும் என்பது எழுத படாத ஒரு விதி. ஆனால் நம் அனைவருக்கும் இணையத்தில் நமக்கு தெரிந்த விசயங்களை வலைபதிவிலோ, இணைய பக்கங்களிலோ மற்றவருக்கு எடுத்து செல்ல வேண்டும் என ஆசை படுவோம். ஆனால் கோடிங் தெரியாத காரணத்தால் ஏதாவது ஒரு டிசைனை எடுத்து நமது விஷயங்களை பகிர்வோம். சில சமயம் நமது பக்கத்தின் டிசைன் பிறர் பார்த்தவுடன் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேறொரு பக்கத்துக்கு சென்று விடுவார்கள். இதோ இந்த குறையை போக்க நமக்கு புதியதொரு மென்பொருளை அறிமுகம் செய்து உள்ளனர் http://www.stiqr.com/ என்ற நிறுவனம். கோடிங், கோடிங் (Coding ) என இருந்த நிலைமையை இவர்கள் தலைகீழாக புரட்டி போட்டு உள்ளனர். "No Code, Just Stick It" என கூறி தங்கள் வலை பக்கத்துக்கு அழைகின்றனர். சரி, ஒருமுறை பாப்போம் என எண்ணி முயிற்சிதேன். மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருக்கிறது. அவர்கள் டிசைன் செய்த வலைப்பதிவை இங்கே பார்க்கலாம். இது போல் நம் வலைபதிவையும் சுவாரசியமாக மாற்ற நினைக்கும் நண்பர்களுக்கு இதோ இதன் வழிமுறை.
01 . முதலில் உங்கள் வலைப்பதிவின் "Edit Html" பக்கத்துக்கு சென்று அங்கே உள்ள HTML கோடில் "/body" என்ற வார்த்தையை தேடவும்.
02 . தேடியப்பின் கீழ உள்ள லிங்கில் சொல்லியது போல் செய்யவும். அங்கே கொடுக்கப்பட்டுள்ள Code'ஐ "/body" என்பதருக்கு முன்பு ஒட்டவும்.
03. Save செய்து விட்டு உங்கள் வலைபதிவிற்கு சென்று Shift +F2 'ஐ அமுக்கவும். உங்களது இ-மெயில் முகவரியையும் , உங்களுக்கான ரகசிய குறியிட்டு சொல்லையும் தேர்ந்தெடுக்கவும்.
04 . நீங்கள் இப்பொது உங்கள் வலைப்பதிவை டிசைன் செய்ய ஆயுத்தம் ஆகலாம்.
05 . இந்த சேவை நமக்கு இலவசமாக கிடைக்கிறது.
நன்றி : Ivan's Blog
» ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...
» உங்கள் சந்தேகங்கள்
» உங்கள் டெஸ்க்டாப் 3D'யில் புதுப்பொலிவு பெற!
» உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்!