டிவிட்டரில் உங்களின் ரேங்க் என்ன?
Page 1 of 1
டிவிட்டரில் உங்களின் ரேங்க் என்ன?
இதோ மீண்டும் நம் வாழ்கையில் வந்து விட்டது ரேங்க் கார்டு. நாம் பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடன் நகத்தை கடித்து கொண்டே " ஐயோ! நமது ரேங்க் என்னவாக இருக்குமோ" என்று பயந்து கொண்டே இருப்போம். ஒரு வழியாக நாம் நல்ல ரேங்க் வாங்கிவிட்டால், நல்ல வேளை தப்பித்து விட்டோம் என பெரு மூச்சு விடுவோம். பெயில் ஆகிவிட்டால் அவ்வளவுதான், எப்படி நமது அப்பாவின் கையெழுத்தை போடுவது என்று முயற்சி செய்வோம். ஒரு வழியாக அடித்து பிடித்து நல்ல படியாக படித்து பள்ளி, கல்லூரி என முடித்து ஒரு வேலையில் அழகாக பயணித்து கொண்டு வாழ்க்யை ஒர்குட், டிவிட்டர் என ஜாலியாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம். இதோ இங்கேயும் வந்து விட்டது ரேங்க் முறை. எப்பொதுமே நாம் நல்ல ரேங்க் வாங்க வேண்டும் என ஆசை படுவோம். இந்த ரேங்க் முறையை புரிந்த கொண்ட ஒரு இனைய தளம் நாம் டிவிட்டரில் எத்தனாவது ராங்கில் இருக்கிறோம் என பட்டியல் இடுகிறது. மிகவும் துல்லியமாக நமது டிவிட்ஸ், நாம் டிவிட்டரில் இருக்கும் நேரம், நாம் எவ்வளவு நேரத்திருக்கு ஒரு முறை டிவிட்ஸ் அனுப்புகிறோம் என பலவற்றை கொண்டு நமது ராங்கை பட்டியல் இடுகிறது http://twitter.grader.com/ என்ற இணையதளம். அது மட்டும் அல்லாமல் உலகத்தில் முதல் 100 இடங்களை பிடித்துள்ள டிவிட்டேரின் பிரபலமானவர்களின் பட்டியலும் வெளியிட்டு உள்ளார்கள். மேலும் இந்த தளம் எப்படி இயங்குகிறது என்ற அறிவியல் தொழில் நுட்பத்தையும் விலக்கி உள்ளார்கள்.
சும்மா ஒரு முறை உங்களது டிவிட்டர் ரேங்க்'ஐ நகம் கடித்து கொண்டு பார்த்து விட்டு வாருங்கள்
நன்றி : Ivan's Blog
Similar topics
» இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?
» 786 என்றால் என்ன?
» கட்ஜு கூறியதில் என்ன தவறு?
» சென்னை மண்ணடியில் நடந்தது என்ன?
» டெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன?
» 786 என்றால் என்ன?
» கட்ஜு கூறியதில் என்ன தவறு?
» சென்னை மண்ணடியில் நடந்தது என்ன?
» டெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum