தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடாஃபி பதவி விலக 72 மணி நேர கெடு:போராட்டக்கரர்கள் அறிவிப்பு!

Go down

கடாஃபி பதவி விலக 72 மணி நேர கெடு:போராட்டக்கரர்கள் அறிவிப்பு!  Empty கடாஃபி பதவி விலக 72 மணி நேர கெடு:போராட்டக்கரர்கள் அறிவிப்பு!

Post by முஸ்லிம் Thu Mar 10, 2011 2:50 pm

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு அளித்துள்ளனர். புரட்சி படையை ஏற்படுத்தி பொதுமக்களுடன் சேர்ந்து அவர்களும் போராடி வருகின்றனர். ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு பெங்காசி, ராஸ் ரன்லுப், மிஸ்ரதா உள்ளிட்ட பல நகரங்கள் போராட்டக்காரர்கள் வசமாகியுள்ளது. தற்போது கடாபியின் ராணுவம் பல இடங்களில் தோல்வி அடைந்து வருகிறது.

எனவே கடாபியின் பலம் குறைந்து வருகிறது. புரட்சிப்படை தலைநகர் திரிபோலியை நெருங்கி வருகிறது. எந்த நேரத்திலும் அது போராட்டக்காரர்கள் வசம் வீழும் நிலை உள்ளது. எனவே அதிபர் கடாபி கலக்கத்தில் உள்ளார். இதற்கிடையே பதவி விலகி விட்டு நாட்டை விட்டு வெளியேற அவருக்குப் போராட்டக்காரர்கள் 72 மணி நேரம் “கெடு” விதித்துள்ளனர்.

இல்லாவிடில் அவர் எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலைமை மோசமடைவதை உணர்ந்த கடாபி பதவி விலக சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்காக அவர் பேரம் பேசி வருகிறார். லிபியாவின் பாராளுமன்றத்தைக் கூட்டி பதவி விலக கால அவகாசம் கேட்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தாம் பதவி விலகும் பட்சத்தில் தனது சுகபோக வாழ்வுக்கு இடைக் கால அரசின் கவுன்சில் ஏராளமான பணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தன் மீது குற்ற வழக்கு விசாரணை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தகவலை அல்ஜசீரா டி.வி. வெளியிட்டதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் “டெய்லி மெயில்” பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போராட்டக்காரர்களுடன் பேச முன்னாள் பிரதமர் ஜடால்லா அஷோஷ்தால் கியை அனுப்பி இருந்தார். இந்த நிபந்தனைகளை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்து விட்டனர்.

பொதுமக்கள், காங்கிரஸ் அமைத்துள்ள கமிட்டியிடம் கடாபி தனது பதவி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும். அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து, பெங்காசியில் இயங்கும் மாகாண தேசிய கவுன்சில் தலைவரும், முன்னாள் சட்ட மந்திரியுமான முஸ்தபா அப்துல் ஜலீல் கூறும்போது, கடாபி பதவியை விட்டு வெளியேறினால் அவர் மீது குற்ற விசாரணைகள் நடைபெறாது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, இதுகுறித்து பேச அவர் யாரையும் அனுப்பவில்லை. ஆனால் அவர் பதவி விலக விதித்த “கெடு” கால அளவை நீட்டிக்க முடியாது. கடாபி லிபியாவில் பெண்களைக் கொன்றுள்ளார். குழந்தைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் கொலை செய்துள்ளார். நாங்கள் திரிபோலியை நோக்கி முன்னேறி செல்கிறோம். விரைவில் அதைக் கைப்பற்றி வெற்றி பெறுவோம் என்றார்.

லிபியா புரட்சி கமாண்டு கவுன்சில் உறுப்பினர் ஜெனரல் முஸ்தபா அல்- ஹரூபியும், ராணுவ மந்திரி அபுபக்கர் யூனூஸ் ஆகிய 2 பேரையும் திரிபோலியில் கடாபி அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. இவர்கள் 2 பேரும் கடாபியின் முக்கிய உதவியாளர்கள் ஆவார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11074
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum