இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டரில் சிக்கி உழலும் குஜராத் அரசு!
Page 1 of 1

இஷ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குஜராத் காவல்துறைக்கு எதிராக மேலும் பல ஆதாரங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் சிக்கியுள்ளன. இது மோடிக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்தத் தீவிரவாதிகள் எனக்கூறி இஷ்ரத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உட்பட நான்கு பேரைக் குஜராத் காவல்துறை என்கவுண்டரில் கொலை செய்தது. இஷ்ரத் ஜஹானின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வு துறையினரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. சிறப்புப் புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில் இஷ்ரத் ஜஹானுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என்றும் காவல்துறை நடத்தியது போலி என்கவுண்டர் என்றும் தெளிவானது. அதன் பின்னர் காவல்துறை நடத்திய அப்போலி என்கவுண்டர் தொடர்பான பல்வேறு ஆதாரங்களைப் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து வருகின்றனர்.
தற்போது, அஹ்மதாபாத்தில் ஃபாரன்சிக் சயின்ஸ் லேபிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்கும், சில முக்கிய புகைப்படங்களும் குஜராத் காவல்துறையினரின் கொடூரங்களைச் சித்தரிக்கும் மிக முக்கிய ஆதாரங்களாக சிறப்புப் புலனாய்வு துறையினருக்குக் கிடைத்துள்ளன. ஃபாரன்சிக் சயின்ஸ் லேப் முன்பு புலனாய்வு குழுவினருக்கு இவற்றை வழங்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களையும் புகைப்படங்களையும் ஐ.ஜி சதீஷ் வர்மா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேரும் காவல்துறையினரால் மிக அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதை இந்த ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட புகைப்படங்களில், நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இரத்த வெள்ளமாக கிடக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அருகில் கிடந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இரத்தக்கறை இன்றி சுத்தமாக உள்ளது. மேலும் அவர்கள் உபயோகித்ததாக கூறப்படும் தோட்டாக்களிலும் சிறுதுளிகூட இரத்தக்கறை இல்லை. அதேவேளையில், காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நான்கு பேரின் உடல்களும் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. ஃபாரன்ஸிக் சயின்ஸ் லேபிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்கில் காணப்படும் புகைப்படங்களில் இவை தெளிவாகக் காணப்படுகின்றன.
அதே போன்று, காவல்துறைக்கும் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நான்கு பேருக்கும் இடையில் நேருக்கு நேர் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அந்த வேளையிலேயே நான்கு பேரும் பலியானதாக குஜராத் காவல்துறை கூறியிருந்தது. ஆனால் கொல்லப்பட்ட நான்கு பேரின் உடலில் குண்டுகள் முதுகு பக்கமிருந்து துளைத்துள்ளன. காவல்துறையினருடன் நேருக்கு நேர் மோதல் நடந்து கொல்லப்பட்ட அவர்களின் உடலில் குண்டுகள் முன்பகுதியில் துளைக்காமல் பின்பகுதியில் துளைத்தது எவ்வாறு என்ற புலனாய்வு துறையினரின் கேள்வியில் குஜராத் காவல்துறை திக்கித் திணறிப்போயுள்ளது.
தற்போது புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்துள்ள இந்த ஆதாரங்களும் இஷ்ரத் ஹஜான் என்கவுண்டர் குஜராத் காவல்துறையின் போலி நாடகம் என்பதை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இது குஜராத் மோடி அரசுக்கு மேலும் தலைவலியை அதிகமாக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நேரம்

Similar topics
» இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொலைச் செய்யப்பட்டது போலி என்கவுண்டரில் – எஸ்ஐடி அறிக்கை
» குஜராத் கலவர ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன: குஜராத் அரசு பல்டி
» கிஷன்ஜி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டாரா?
» இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் போலியானது - சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை!
» போலி என்கவுண்டரில் ஈடுபடும் போலீசாரை தூக்கிலிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum