தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இன்றைய இந்திய திருநாட்டின் ஜனத் தொகை 121 கோடி!

Go down

இன்றைய இந்திய திருநாட்டின் ஜனத் தொகை 121 கோடி!  Empty இன்றைய இந்திய திருநாட்டின் ஜனத் தொகை 121 கோடி!

Post by முஸ்லிம் Thu Mar 31, 2011 6:04 pm

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை செயலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் இந்த விவர அறிக்கையை வெளியிட்டார். இந்த கணக்கெடுப்பின படி இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 1.21 பில்லியன்.(121 கோடி ) . இந்திய மக்கள் தொகை 181 மில்லியன் ( 18 கோடியே பத்து லட்சம் ) அதிகரித்துள்ளது, ஆண்களின் எண்ணிக்கை : 62.3 கோடி ; பெண்களின் எண்ணிக்கை : 58.6 கோடி.



கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்சஸ்சின் போது இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 ( 2001 ம் ஆண்டில்) சதவிதத்தில் இருந்து 17.64 ( 2011ம் ஆண்டில் ) சதவீதமாக குறைந்துள்ளது.

இந்திய திருநாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இத்துடன் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு களுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற அளவில் விகிதாச்சாரம் மிக குறைந்து அமைந்துள்ளது என சென்சஸ் விவரத்தில் தெரியவந்துள்ளது. 25 சதவீத பேர் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர். இதில் கல்வியறிவு பெற்றவர்களில் ஆண்களைவிட பெண்கள் முன்னணியில் உள்ளனர்.

அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் கூட்டு மக்கள் தொகை எவ்வளவோ அதனை விட இந்தியா மக்கள் அதிகம் பெற்றுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் பெற்றது ஆகும். உ. பி., மகாராஷ்ட்டிரா மாநில கூட்டு மக்கள் தொகை அமெரிக்காவை விட அதிகம். டில்லியின் வடகிழக்கு பகுதி மக்கள் மிக அடர்த்தியாக வாழும் பகுதி ஆகும். அருணாசல பிரதேசத்தில் டிபங் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் மிக குறைவாக வாழும் பகுதி ஆகும் என்றும் இன்றைய சென்சஸ் விவரத்தில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்-2011) பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிந்தது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11139
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 5 கோடி மக்களுக்கு நீதி செலுத்த முடியாத மோடி எவ்வாறு 125 கோடி மக்களைப் பாதுகாப்பார்?
» 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு கோரிக்கை! அவசரத் தந்தியனுப்பி உதவுங்க‌ள்!
» ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை
» 60 கோடி பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பில்லை-ஐ.நா
» நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: தடை செய்யப்படுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum