பீகார் வயலில், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 15 சிசுக்கள் கரு!
Page 1 of 1

பீகாரில் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள வயல் ஒன்றில், ரசாயனம் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் ஜாடிகளில் அடைக்கப்பட்டு, இறந்த நிலையில் கிடந்த, 15 சிசுக்கள் கரு கண்டுபிடிக்கப்பட்டன.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து, 400 கி.மீட்டர் தொலைவில் உள்ளது கிஷன்கஞ்ச். இந்த கிஷான் கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது சபாஷ்பள்ளி கிராமம். இங்குள்ள பள்ளிக்கூடம் பின்புறம் உள்ள வயல் ஒன்றில், பிளாஸ்டிக் பாத்திரம் ஒன்று அனாதையாக கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது உள்ளே குழந்தைகள் கருக்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை பெண் சிசுக்கள்.
இதுகுறித்து கிஷன்கஞ்ச் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,ஆர்.கே. மிஷ்ரா கூறுகையில், "பிளாஸ்டிக் ஜாடிகளில் அடைக்கப்பட்டிருந்த சிசுக்களின் வயது, 4 முதல் 6 மாதங்களுக்குள் இருக்கும். அனைத்தும், ரசாயனம் கலந்த தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு இருந்தன. சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்பு நடந்ததா என்பது குறித்து விசாரணை துவக்கியுள்ளோம்” என்றார்.
ஏதோ ஒரு ஆஸ்பத்திரியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து அவற்றை இங்கு கொண்டு வந்து போட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே சுற்று வட்டார ஆஸ்பத்திரிகளில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதே போல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், ரசாயனம் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் ஜாடிகளில் 16 சிசுக்கள் இறந்த நிலையில் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தவிர குஜராத், ஆமதாபாத்தில் உள்ள பாபுநகரில், 12 சிசுக்கள், தெரு நாய்கள் பாதி சாப்பிட்ட நிலையில், சிதறிக் கிடந்தன. இவற்றில் 7 ஆண், 5 பெண் சிசுக்கள்.
இந்நேரம்

Similar topics
» பீகார் குஜராத்தாக மாற்றப்படுவதற்கு முன் ஒன்று சேருங்கள்: லாலு
» வெடிக்காத நிலையில் விமான நிலையத்தில் 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு!
» போர்ப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணை: பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» பாக்.எல்லையில் போருக்கு தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்
» சவூதி: விபத்தில் இறந்த இளைஞனின் உடல் உறுப்புகள் தானம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum