இந்தியா பற்றி தவறாக ஏதும் சொல்லவில்லை, இந்தியர்களை நேசிக்கிறேன்" : அஃப்ரிதி
Page 1 of 1

இந்தியர்களை நேசிக்கிறேன். அவர்களைப் பற்றி தவறாக ஏதும் கூறவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் அஃப்ரிதி கூறியிருக்கிறார்.
இந்தியர்களுக்கு பரந்த மனப்பான்மை இல்லை என பாகிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் ஷாகித் அஃப்ரிதி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திஇருந்தது.
உலகக் கோப்பை வெற்றியை மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பேன் என கெளதம் கம்பீர் கூறியது குறித்து அஃப்ரிடியிடம் கேட்ட பின்னரே அவர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து அவ்வாறு கூறியதாக அஃப்ரிடியின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
தான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.சிறிய விவகாரங்களை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன. இது அவமானம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை முன்னேற்ற என்னாலான சிறு முயற்சியை எப்போதும் செய்துவருகிறேன்.
ஆனால் சில சமயம் நாம் ஒன்று சொல்கையில் அது வேறு ஒன்றாக மாற்றப்படுகிறது. நான் சொல்லாததை சொன்னதாகக் கூறியுள்ளனர் என அஃப்ரிடி தெரிவித்தார்.
இந்தியாவில் கிரிக்கெட்டை மிகவும் ரசித்தேன். இந்திய மக்களை நேசிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய ரசிகர்கள் என் மீது எப்போதும் ஏராளமான அன்பும், பாசமும் வைத்துள்ளனர். ஊடகங்களே, இதுபோன்று அற்பமான விவகாரங்களில் காலத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அஃப்ரிடி கூறினார்
இந்நேரம்

Similar topics
» சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா
» அம்மா உன்னை நேசிக்கிறேன்..
» பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது!
» 1948 ஃபலஸ்தீன் இனப் படுகொலைப் பற்றி உண்மையை வெளிக்கொணரும் முன்னாள் இஸ்ரேல் வீரர்
» அப்சல் குருவை பற்றி பேசியதற்காக தைரியமிருந்தால் வழக்கு போடவும் : பாஜகவுக்கு உமர் அப்துல்லா சவால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum