இந்தியா:இணையதளங்கள், வலைப்பூக்களுக்கு இனி கடுமையான கட்டுப்பாடுகள்
Page 1 of 1

கொச்சி:இணையதள பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்த மத்திய அரசின் முயற்சிகள் முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது. இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆக்டில் உட்படுத்தி நடைமுறை படுத்தவிருக்கும் இணையதள கட்டுப்பாட்டிற்கான வரைவு மசோதா தயாராகிவிட்டது.
இணைய தளங்களும், வலைப்பூக்களும் கண்காணிப்பது உள்பட கடுமையான கட்டுப்பாடுகள் இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இணையதள சேவை தருபவர்கள் (ISP), இணயதள சேவையாளர்கள், சமூக நெட்வர்க்குகள் ஆகியன இந்த மசோதாவின் வரையறைக்குள் உட்படும். தற்போதைய இணைய தளங்களை கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ சாத்தியமாகும் முறையில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இணையதளத்தில் உண்மை என்ன? என்பது குறித்து பரிசோதித்து விட்டு அவற்றை தடை செய்வதற்கு முன் அனுமதி தேவையில்லை என சட்டம் கூறுகிறது. வலைப்பூக்களுக்கும், ஆன்லைன்களுக்கும், மொபைல் பிசினஸ் ஆகியவற்றிற்கும் முன்னறிவிப்பு இல்லாமலேயே கட்டுப்பாடு விதிக்க மசோதாவில் சட்டப்பிரிவு உள்ளது.
பிறரை அவமானிக்கும் விதமாகவோ, காழ்ப்புணருவுடன் கூடிய செய்தியோ, அந்தரங்கத்தை பாதிக்கும் விதத்திலான செய்தியோ, தவறான புரிந்துணர்வையும், கொந்தளிப்பையும் உருவாக்கக்கூடிய செய்திகளையோ இணையதளங்கள் வழியாக பிரசுரிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகையவற்றை பிரசுரித்தால் 36 மணி நேரத்திற்குள் அவற்றை நீக்கம் செய்ய சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 90 தினங்கள் வரை புகார் அளிக்கப்படும் இணையதளங்கள், வலைப்பூக்கள் விசாரணையின் ஒரு பகுதியாக கண்காணிக்கப்படும். ஏதேனும் ஒரு நபர் புகார் அளித்தால் ஐ.எஸ்.பி (இணையதள சேவை தருபவர்) 36 மணிநேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தனிநபர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் புகைப்படங்களை ட்விட்டர், பேஸ்புக், ஆர்குட் போன்ற நெட்வர்க்குகளில் பிரசுரிப்பதும் குற்றமாகும். இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிரான கருத்துக்கள் என கருதப்படும் செய்திகளை பிரசுரித்தால் முன்னறிவிப்பு இல்லாமலேயே இவை தடை செய்யப்படும். மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சரியான முகவரியோ அல்லது உரிமையாளர் குறித்த சரியான விபரமோ இல்லாத இணையதளங்களும், வலைப்பூக்களும் தடை செய்யப்படவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பருவமடையாத நபர்களை பாதிக்கக்கூடியவற்றை பிரசுரிப்பது, காப்புரிமை இல்லாதவற்றை டவுன்லோடு செய்வது, பிரசுரிப்பது ஆகியன குற்ற செயல்களாகும்.
இதர நபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு நாசம் விளைவிக்கும் வைரஸ்களை அனுப்புவதும் குற்ற செயலாகும். கட்டுப்பாடில்லாமல் எத்தகைய செய்தியையும் பிறருக்கு அனுப்புவது, அதிகாரப்பூர்வமாக பிரசுரித்த செய்திகளில் குளறுபடி செய்து வாசகர்களிடம் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் இச்சட்டத்தின்படி குற்றமாகும்.
இணையதளம் வழியாக நடைபெறும் பொருளாதார முறைகேடுகள், சூதாட்டம் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன. இணையதள சேவையாளர்கள் இந்த சட்டத்தின் பிரிவுகளையும், கட்டுப்பாடுகளையும் பயனீட்டாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இம்மசோதாவில் காணப்படும் பல சட்டப்பிரிவுகளும் அரசு துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு, தேசீயம் ஆகிய பிரயோகங்கள் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Similar topics
» சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா
» சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி
» தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி-ஈரான்
» லிபியாவில் சிறைக் கைதிகளுக்கு கடுமையான சித்திரவதை
» மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum