அஜ்மீர் குண்டுவெடிப்பு:குற்றப்பத்திரிகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் பெயர்
Page 1 of 1

ஜெய்ப்பூர்:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் விதமாக அவ்வமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ்குமாரின் பெயரை சேர்த்து என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை தயார் செய்துள்ளது. அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தான் இந்திரேஷ்குமாரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்த்துவது தொடர்பாக ஜெய்ப்பூரில் நடந்த ரகசிய கூட்டத்தில் இந்திரேஷ்குமார் பங்கேற்றதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கை முன்பு விசாரித்த ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையும் இந்திரேஷ் குமாரின் பங்கினை வெளிப்படுத்தியிருந்தது. தற்போது இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் என்.ஐ.ஏவும் ஏ.டி.எஸ் வழியே விசாரணையை தொடர்கிறது. 2005 அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி ஜெய்ப்பூரில் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசிய கூட்டத்தில் பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே ஆகியோருடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றதாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.
குண்டுவெடிப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றவும், எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் பல்வேறு மத அமைப்புகளில் உறுப்பினர்களாக சேர்ந்து செயல்படவும் இந்திரேஷ் குமார் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்திரேஷுடனான கூட்டத்தில் பங்கேற்க பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி ஆகியோர் 2005 அக்டோபர் மாதம் ஜெய்ப்பூருக்கு வந்ததாக ஏ.டி.எஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால்,இந்திரேஷ்குமாரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருப்பது இது முதல் தடவையாகும். இச்சம்பவத்தில் தொடர்புடைய சுவாமி அஸிமானந்தாவும், பாரத் பாயியும் இந்திரெஷின் பங்கினை குறித்து தெரிவித்ததாக ஏ.டி.எஸ் கூறியிருந்தது.
குஜராத் சமாஜ் விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசிய கூட்டத்திற்கு பிறகு திட்டத்தை செயல்படுத்த மிஹிமாஜ் ஜம்தாதா, தன்பாத், நாராயண்பூர், மேற்கு வங்காளத்தில் சிதராம்ஜன் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை போல ரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. 2007-ஆம் ஆண்டு மிஹிமாஜில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில்தான் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிற்கு இறுதியான திட்டம் தீட்டப்பட்டது.

Similar topics
» அஜ்மீர் குண்டுவெடிப்பு இந்துக்களின் தர்கா விஜயத்தை தடுக்கவே - ஆசிமானந்த் !
» பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது'
» அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக். டாக்டர் விரைவில் விடுதலை
» அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடிப்பு
» ஈரான் தெருவிற்கு அமெரிக்க சமூக சேவகியின் பெயர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum