போலி என்கவுண்டர்:குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும்-உச்சநீதிமன்றம்
Page 1 of 1

புதுடெல்லி:போலி என்கவுண்டர் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தகைய வழக்குகளை மிக அபூர்வமான வழக்குகளில் உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டுமென போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து போலீஸ்காரர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
போலி என்கவுண்டர்கள் சட்டத்தை பாதுகாக்கப்பட வேண்டியவர்களால் நடத்தப்படும் மிக கொடூரமான கொலைகளாகும். சட்டத்தின் பாதுகாவலர்களிடமிருந்து உருவாகும் இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்துவதற்காக போலி என்கவுண்டர் என்ற பெயரில் கொலை பாதகங்களை நடத்தும் போலீஸ்காரர்களுக்கு ஒரு போதும் மன்னிப்பு வழங்கமாட்டோம் என நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்தார்.
போலி என்கவுண்டர் கொலையை நடத்த உத்தரவிடும் மேலதிகாரியின் சட்டத்திற்கு புறம்பான கட்டளையை நடைமுறைப் படுத்தாமலிருப்பது தான் போலீஸ்காரரின் பணியாகும். ஆனால், மேலதிகாரியின் சட்டத்திற்கு புறம்பான உத்தரவை நடைமுறைப் படுத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும் என கட்ஜு தெரிவித்தார்.
மும்பைக்கு அருகில் கடந்த 2006-ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஏஜண்டான ராம் நாராயணன் குப்தா போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீஸ்காரர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்தது.
முன்னர் விசாரணை நீதிமன்றம் ஐந்து போலீஸ்காரர்களுக்கு ஜாமீன் வழங்கியிருந்த போதும் உயர் நீதிமன்ற ஜாமீனை ரத்து செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவில் உஸ் சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை அளித்துள்ளது.

Similar topics
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்
» குஜராத் போலி என்கவுண்டர் விசாரணை: நீதிபதி ஷா கண்காணிப்பார்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்:குற்றப்பத்திரிகை வழங்கவேண்டும் – ஃபாரூக் அப்துல்லாஹ்
» போலி என்கவுண்டர்:16 வயது சிறுமியின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் இழப்பீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum