போர்க்குற்றவாளி ம்ளாடிச் கைது
Page 1 of 1
போர்க்குற்றவாளி ம்ளாடிச் கைது
பெல்க்ரேட்:செர்பியா போர்க்குற்றவாளியும், ஐரோப்பாவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தை வகித்தவருமான ரட்கோ ம்ளாடிச் கைது செய்யப்பட்டுள்ளார். வரலாற்றில் ஒரு அத்தியாயம் முடிவுறுகிறது. இதன் மூலம் பிராந்தியத்தின் ஐக்கியத்தில் ஒரு படியை கடந்துள்ளோம் என ம்ளாடிச்சின் கைது செய்தியை அறிவித்த செர்பியாவின் அதிபர் போரிஸ் டாடிச் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை மற்றும் போர் குற்றத்தின் பெயரில் ஹேகின் தீர்ப்பாயம் ம்ளாடிச்சிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. 1995-ஆம் ஆண்டு ஸெப்ரனிகா நகரத்தில் 7500 முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ம்ளாடிச் ஆவார். இரண்டாவது உலகப்போருக்கு பிறகு உலகம் கண்ட மிகப்பெரிய இனப்படுகொலை தான் செர்பியா முஸ்லிம் இனப்படுகொலை.
ம்ளாடிச்சின் கைதுக்குறித்து கூடுதல் விபரங்களை டாடிச் தெரிவிக்கவில்லை. செர்பியாவிலிருந்து ம்ளாடிச் கைது செய்யப்பட்டார். விசாரணை முடிவடைந்தால் மட்டுமே கூடுதல் விபரங்கள் தெரிவிக்க இயலும். பல வருடங்களாக ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் பதவிக்காக முயலும் செர்பியாவுக்கு ம்ளாடிச்சின் கைது உதவும் என நம்புவதாக டாடிக் கூறினார். பெல்க்ரேடில் சாதாரணமாக வாழ்ந்த ம்ளாடிச் 2001-ஆம் ஆண்டு யூகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் ஸ்லோபோடன் மிலோஸெவிச் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமறைவானார்.
ம்ளாடிச்சின் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் ராணுவமும், அரசும் அவரை பாதுகாப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீதியை நிலை நாட்டுவோம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. ஹேக் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ள கொரான் ஹாட்ஸிக்கையும் கைதுச்செய்வோம் என உறுதி அளிக்கிறோம் என டாடிச் தெரிவித்துள்ளார்.

Similar topics
» விக்கிலீக்ஸ்: ராஜபக்சே போர்க்குற்றவாளி!
» போர்க்குற்றவாளி மிளாடிச் நீதிமன்றத்தில் ஆஜர்
» செர்பியா போர்க்குற்றவாளி மிலாடிச் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றம்
» ஈரானில் 12 சி.ஐ.ஏ உளவாளிகள் கைது
» உம்மன்சாண்டிக்கு கறுப்புக்கொடி: முஸ்லிம்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum