நியமத் அன்ஸாரி கொலை வழக்கு:சி.பி.ஐ விசாரிக்கவேண்டும்-மத்திய அரசு
Page 1 of 1

புதுடெல்லி:ஜார்கண்ட் மாநிலத்தில் மகாத்மாகாந்தி தேசிய கிராமீய வேலை உறுதித்திட்டத்தில் முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த சமூக சேவகர் நியாமத் அன்ஸாரி கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என மத்திய கிராம வளர்ச்சி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அன்ஸாரி கடந்த 2011 மார்ச் 2-ஆம் தேதி படுகொலைச்செய்யப்பட்டார்.
மாவோயிஸ்டுகள் அன்ஸாரியை கொலைச்செய்ததாக கூறி ஜார்கண்ட் மாநில அரசு அளித்த அறிக்கையை நிராகரித்த அமைச்சகம் லாதெஹார் மாவட்ட துணை கமிஷனர் ராகுல் பவார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது.
க்ரிமினல்களும்,அரசும் சேர்ந்து திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்தது குறித்து அன்ஸாரி கேள்வி எழுப்பியிருந்தார்.வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடுகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் குழுவில் அன்ஸாரியும் உறுப்பினராக பதவி வகித்தார்.
அரசு அதிகாரிகள் க்ரிமினல்களுடன் சேர்ந்து நடத்தும் பொருளாதார முறைகேடுகளை வெளிக்கொணர முயலும் சமூக ஆர்வலரும் மத்திய வேலைவாய்ப்பு உறுதித்திட்ட குழுவின் உறுப்பினருமான ஜீந்தரஸியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இச்சம்பவத்தை விசாரணை நடத்தும் மத்திய கிராம வளர்ச்சி துறை செயலாளர் பி.கெ.சின்ஹா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம், போலீஸ் ஆகியோரின் பங்கினை குறித்து விசாரணை நடத்தவேண்டுமென சி.பி.ஐயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வேலை உறுதி திட்டத்தில் புதுப்பித்த சம்பளம் குறித்து கேள்வி எழுப்பியதால் தொழிலாளி ஸுபல் மஹாதாவை தொழில் உரிமையாளர் அடித்துக்கொன்ற சம்பவத்தையும் சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Similar topics
» சமூக வலை தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி
» ருஷ்டி:எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் – மத்திய அரசு
» மலேகான்:முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை மத்திய அரசு எதிர்க்காது
» சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி
» இந்தியாவின் கருப்புப் பணம் எவ்வளவு - ஆய்வு நடத்த மத்திய அரசு திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum