தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ரஃபா: திறந்தது நம்பிக்கையின் வாசல்

Go down

ரஃபா: திறந்தது நம்பிக்கையின் வாசல்  Empty ரஃபா: திறந்தது நம்பிக்கையின் வாசல்

Post by முஸ்லிம் Thu Jun 02, 2011 4:52 pm

ரஃபா: திறந்தது நம்பிக்கையின் வாசல்  Rafah-270x170
எகிப்திய மக்களுக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும். சர்வாதிகாரியும், அமெரிக்கா-இஸ்ரேலின் உற்றத் தோழனுமான ஹுஸ்னி முபாரக்கை அந்நாட்டு மக்கள் புரட்சியின் வாயிலாக பதவியிலிருந்து அகற்றியது மூலம் காஸாவிற்கு செல்லும் ரஃபா எல்லையின் செக் போஸ்டை எகிப்தின் தற்காலிக அரசு திறந்துள்ளது.

காஸா-எகிப்து எல்லையை திறந்ததை தொடர்ந்து முதன் முதலாக ரஃபா வழியாக எகிப்திற்குள் பிரவேசித்தது அவசர சிகிட்சை தேவையான 2 பலஸ்தீன் நோயாளிகளை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸாகும். இதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக
இழுத்து மூடிய ரஃபா நுழைவு வாயிலின் முக்கியத்துவத்தை நாம் புரிந்திருப்போம்.

காஸாவிலிருந்து வெளியேற வழியில்லாமல் நூற்றுக்கணக்கான பலஸ்தீன் சகோதரர்கள் பின்னர் வந்த ஆண்டுகளில் சிகிட்சை கிடைக்காமல் ஆபத்தான கட்டத்தை அடைய நேர்ந்தது. காரணம், இஸ்ரேலிருந்து மேற்கு கரைக்கு செல்லும்
அனைத்து வழிகளையும் ஒரு காக்கை கூட செல்ல முடியாத அளவுக்கு சியோனிச அரசு இழுத்து மூடியதால ரஃபா அல்லாத வேறு எந்த வழியிலும் பலஸ்தீன் மக்களுக்கு வெளி உலகுடன் தொடர்பு கொள்ள இயலாமல் போனது.

2006-ஆவது ஆண்டிலேயே ரஃபா எல்லை இழுத்து மூடபட்டிருந்தாலும், 2007 ஆம் ஆண்டு முதல் ஒரு ஊசி கூட நுழைய முடியாத அளவுக்கு இஸ்ரேல்-அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக் எல்லையை
மூடினார். சுரங்கங்கள் தோண்டி அதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை கடத்துவதை தடுக்க ஆழத்தில் ஒரு இரும்பு மதில் கட்டுவதற்கு முபாரக் திட்டமிட்டிருந்தார்.

ஹமாஸிற்கும், அமெரிக்காவின் கைப்பாவையான மஹ்மூத் அப்பாஸின் அல் பத்ஹிற்கும் இடையே நிலவிய மோதல் எல்லையை மூடும் அளவுக்கு கொண்டு சென்றதாக அரசியல் நோக்கர்கள் கூறினாலும், உண்மையில் எல்லையின்
மீதான ஹமாஸின் கட்டுப்ப்பட்டில் அதிருப்தி அடைந்த இஸ்ரேல் தான் எகிப்து அரசின் மூலமாக ரஃபா எல்லையை மூடும் கொடூரத்தை செய்ய வைத்தது.

இதனைத்தொடர்ந்து காஸ்ஸாவில் மக்கள் கடும் பட்டினியால் வாடினர். வேலைத்தேடி வெளியே செல்ல முடியாம்ல், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் திண்டாடிப்போயினர்.

ஒரு சமூகத்தையே பட்டினிப்போட்டு கொலை செய்யும் கொடூரத்தைக் கண்டு பரிதாபம் அடைந்து துருக்கியின் தன்னார்வ மனித நேய தொண்டர்கள் அத்தியாவசியப் பொருட்களுடன் கப்பலில் புறப்பட்டு காஸ்ஸாவை நோக்கி வந்த வேளையில் அக்கிரமங்களை கட்டவிழ்த்து விட்டு மனித நேய ஆர்வலர்களை சுட்டு தள்ளியது இஸ்ரேல். பொய்யான காரணங்களை கூறி தாக்குதலை நியாயப்படுத்த முயன்றனர் இஸ்ரேலியர்கள்.

எல்லையை மூடியதற்கு எதிராக ஐ.நா தீர்மானம் நிறைவேற்றிய போதும் ஏற்கனவே நிறை வேற்றப்பட்ட இஸ்ரேலுக்க்கு எதிரான தீர்மானங்களைப் போலவே இந்த தீர்மானத்தையும் குப்பைக் கூடையில் வீசியது சியோனிச அரசு.

ரஃபா எல்லை முழுமையாக திறக்கப்படவில்லை. எகிப்தில் வருகிற தேர்தலில் வெற்றி பெறும் புதிய அரசு ஆட்சியில் அமரும் போது தற்போதைய பல்வேறு கடுமையான நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழலுக்கு இஸ்ரேல்
தள்ளப்படும். எகிப்தில் ஜனநாயக சக்திகளின் வெற்றி உண்மையில் மத்திய கிழக்கை சார்ந்த அனைத்து மக்களின் வெற்றியாகும்!

அ.செய்யது அலீ


ரஃபா: திறந்தது நம்பிக்கையின் வாசல்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum