அமெரிக்கா:உஸாமாவின் சகோதரன் என கூறி சீக்கியருக்கு அடி-உதை
Page 1 of 1

நியூயார்க்:அமெரிக்காவால் படுகொலைச்செய்யப்பட்ட உஸாமா பின் லாதினின் சகோதரர் என குற்றம்சாட்டி அமெரிக்க இளைஞர் ஒருவர் சீக்கியரை தாக்கியதில் அவருடைய பல் உடைந்தது.
கடந்த மாதம் 30-ஆம் தேதி ஓடிக்கொண்டிருந்த ரெயிலில் வைத்து 59 வயதான ஜீவன் சிங்கின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.தாக்குதலில் ஜீவன் சிங்கின் 3 பற்கள் உடைந்தன.மெட்ரோபாலிடன் ட்ரான்ஸ்போர்ட் பணியாளரான ஜீவன் சிங் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவருகிறார்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இச்செய்தியை முதன் முதலில் வெளியிட்டுள்ளது.”நீ உஸாமாவின் சகோதரனா?” என கேட்டுக்கொண்டே அமெரிக்க இளைஞர் ஜீவன் சிங்கை தாக்கியுள்ளார். அப்பொழுது அவர்,’நான் உஸாமா இல்லை. எனக்கு அவருடன் எவ்வித தொடர்பும் இல்லை’ என கூறியபொழுதும் வெறிப்பிடித்த அமெரிக்க இளைஞர் தாக்குதலை நிறுத்தவில்லை என சிங் கூறுகிறார்.
ரிச்மண்ட் ஹில் பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் வழியில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.’எனது தாடிதான் அமெரிக்க இளைஞருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.எனது 23 வயதான மகன் ஜாஸ்மின் சிங் மீதும் கடந்த 2009 ஆம் ஆண்டு இதே மாதிரியான தாக்குதல் நடந்தது .தாக்குதலில் ஜாஸ்மின் சிங் ஒரு கண்ணை இழந்தார். தாடியும், தலைப்பாகையும் எனது மகனுக்கு வினையாகி போனது.’என கூறுகிறார் 5 பிள்ளைகளின் தந்தையும், எலக்ட்ரிகல் எஞ்சியனருமான ஜீவன்சிங்.
’எனது கம்பார்ட்மெண்டில் பகுதி காலியாக இருந்தது.20 வயது மதிக்கத்தக்க இளைஞர் நேராக என்னிடம் வந்து எழுந்து செல்லுமாறு கூறினார். பின்னர் எனது ஷர்ட்டின் காலரை பிடித்து உயர்த்தி வேறொரு சீட்டில் எறிந்தார். பின்னர் ‘தாலிபான் காரன் இங்கே இருப்பதா?’ என கேட்டுவிட்டு முகத்தில் அறைந்தார். என்னை அடித்துவிட்டு ‘இது உஸாமாவுக்காக இருக்கட்டும்’ என கூறீனார்’ ஜீவன் சிங் கூறுகிறார்.
சம்பவத்தை குறித்து போலீஸ் விசாரணை நடத்துவதாக நியூயார்க்டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

Similar topics
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?
» உஸாமாவின் கடைசி நிமிடங்கள்
» உஸாமாவின் புதிய டேப்பும் போலி
» ஃபலஸ்தீனில் அமைதி உருவாகும் வரை அமெரிக்காவிற்கு நிம்மதி இருக்காது:உஸாமாவின் கடைசிச்செய்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum