கணக்கின்றித் தொடரும் கைதுகள்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை அடாவடி
Page 1 of 1

கடந்த வியாழக்கிழமை (09.06.2011) அதிகாலையில் மேற்குக்கரைப் பிராந்தியத்திலும் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய-கோலான் குன்றுப் பிரதேசத்திலும் இருந்து 8 பலஸ்தீன் பொதுமக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கைதுசெய்துள்ளது.
தென் பெத்லஹேமின் தாகூ கிராமத்தினுள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அங்கு திடீர்த் தாக்குதல் நடாத்தியுள்ளது. தேடுதல் வேட்டை என்ற போர்வையில் பலஸ்தீன் வீடுகளுக்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்த ஆக்கிரமிப்புப் படை, 55 வயது முதியவர் ஒருவரையும் அவரது மூன்று மகன்களையும் கைதுசெய்து தடுப்பு முகாம்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், தமூன் கிராமத்தில் இருந்து இளைஞர் ஒருவரையும், மஜ்தால் ஷம்ஸ் கிராமத்தில் இருந்து மற்றும் மூன்று பொதுமக்களையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் சிரியா- கோலான் குன்றுப் பிராந்தியத்தில் உள்ள பலஸ்தீன் எல்லைப் பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டதை 'யவ்முன் நக்பா' எனும் துக்க தினமாக நினைவுகூறும் வகையில், பலஸ்தீன் எங்கிலும் அமைதிப் பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்தப் பேரணிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடும் தாக்குதல்களுக்கு உள்ளானதில் பலஸ்தீன் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டதோடு, ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோலான் குன்றுப் பிரதேசத்தில் இடம்பெற்ற பேரணியின்போது ஆக்கிரமிப்புப் படைத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 23 பலஸ்தீன் பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, நிறையப்பேர் படுகாயமடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பேரணியாளர்கள் ஆக்கிரமிப்புப் படையினரை நோக்கிக் கற்களை எறிந்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பு இராணுவம், பலஸ்தீன் பொதுமக்களில் 25 பேரை இதுவரை கைதுசெய்துள்ளது. எனின், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்நேரம்

Similar topics
» பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி
» மத்திய காஸாவில் இஸ்ரேலிய அடாவடி: சிறுவன் படுகாயம்!
» பலஸ்தீன் சிறுவர்கள் மீதான அத்துமீறல்கள் -தொடரும் இஸ்ரேலிய அராஜகம்
» பலஸ்தீன் இளம் தாய் கைது- ஆக்கிரமிப்புப் படையின் அடாவடி
» பா.ஜ.கவினரின் அடாவடி: தமிழக-கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum