கூகுள் தமிழுக்கு பங்களிப்பு(contribute) செய்வோம்
2 posters
Page 1 of 1
கூகுள் தமிழுக்கு பங்களிப்பு(contribute) செய்வோம்
கூகுளின் மொழி மாற்று வசதியை பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் உள்ளது. மொழிபெயர்ப்பும் சிறப்பானதாக இல்லை. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கிறது. சில வாக்கியங்களை மட்டுமே சரியாக மொழிபெயர்க்கிறது. இதனை சரி செய்யும் பணி நம் கைகளில்தான் உள்ளது. ஆம், இந்த மொழிமாற்று வசதியை கூகுள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இத்தனை நாட்களாக கூகுளின் மொழி மாற்றி லேப் தளத்தில் சில தன்னார்வலர்களால் பதியப்பட்டு வந்த வார்த்தைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டியதும், உலகம் முழுவதிலிமிருந்து கூகுள் தளத்திற்கு வரும் தமிழ் அன்பர்களின் வளர்ச்சியும்தான் (வியாபார யுக்தி என்றும் சொல்லலாம்) கூகுள் தன் மொழிபெயர்ப்புப் பட்டியலில் தமிழைச் சேர்த்ததற்குக் காரணம்.
இந்த மொழிபெயர்ப்பு சேவை தமிழுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த நாம் மொழி மாற்றிப் படிக்க நினைக்கும் கட்டுரை அல்லது இணையதளத்தை தேர்ந்தெடுத்து உள்ளிடும்போது கிடைக்கும் தமிழ் மொழிபெயர்ப்புக் கட்டுரையில் வார்த்தைகள் தவறாக இருந்தால் அதனை உடனடியாக சரி செய்யலாம்.
அதற்குத் தவறான சொற்றொடரின் மீது மொளசின் முனையை கொண்டு சென்றால் அச்சொல்லிற்கு இணையான வேறு சொற்கள் காட்டப்படும். அதில் சரியானதைத் தேர்ந்தெடுத்த அளிக்கலாம் அல்லது வேறு புதிய பொருத்தமான வார்த்தை அல்லது வாசகம் இருந்தால் அதனை உடனடியாக தட்டச்சு செய்து உள்ளிடலாம்.
அதுவே இணையதள மொழி மாற்றியாக இருந்தால் Contribute a better translation என்ற Box வரும். அதனைக் கிளிக் செய்து சரியான சொற்றொடரைக் கொடுத்து Contribute என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
(இப்படிச் செய்வதால் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா?
அதற்காக சிறு விளக்கம். தொழில் நுட்பத்துறை சார்ந்தவர்களுக்கு தெரிந்ததுதான், மற்றவர்களுக்காக:
கூகுள் தளத்தின் சிறப்பே அதுதான். கூகுள் இணைய தளத்தில் நீங்கள் தேடும் ஒரு விஷயம் தொடர்ந்து பல மாதங்களுக்கு அதன் டேட்டா பேஸில் பதிந்து வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல நீங்கள் எந்த ஐபி முகவரி அல்லது ஜிமெயில் கணக்கிலிருந்து தேடியுள்ளீர்கள் என்பதும் நீங்கள் தேடும் பொருள் குறித்த பட்டியலில் எந்த இணையதள இணைப்பை கிளிக் செய்கிறீர்கள் என்பதும் கூடப் பதியப்படுகிறது. இதுபோல உலகம் முழுவதுமிருந்து தேடுபவர்களின் விபரங்களை கூகுள் ஒவ்வொரு நொடியிலும் பதிந்து கொண்டேயிருக்கிறது. (இந்த செயல் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்ற குரல் ஒலித்தாலும், அதுதான் கூகுளின் அஸ்திவாரம் )
எடுத்துக்காட்டாக அண்ணா யுனிவர்சிட்டி என்று கொடுத்து தேடும்போது முதலிடத்தில் பல்கலைக் கழகத்தின் இணையப்பக்கம் வருவதும் இந்த அடிப்படையில்தான். ஒரு இணையதளத்தை அதிகம்பேர் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்தால் அவர்கள் கிளிக் செய்த நாடு, பகுதி, இணையதளத்தின் வகை, தேடும் பொருள், அது சார்ந்த பிற என்று பல கூடுதல் விபரங்களையும் அலசி ஆராய்ந்து நீங்கள் தேடுவது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம்தான் என்பதாக முடிவெடுத்துக் காட்டுகிறது.
அதுவே அண்ணா பல்கலைக்கழகம் என்று ஒன்று கனடாவில் இருந்தால் நீங்கள் இருக்கும் இடம் கனடாவாக இருக்கும் பட்சத்தில் கனடாவில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தை முன்னிலைப்படுத்திக் காட்டக் கூடும்.
இத்தொழில்நுட்பம்தான் கூகுளின் அனைத்து வகை சேவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.)
எனவே நீங்கள் இப்போது கொடுக்கும் சரியான வார்த்தை அல்லது வாக்கியம் மற்றொருமுறை அதே போன்ற வாக்கிய அமைப்பு வரும்பொழுது பயன்படுத்தப்படும். வளமை மிக்க தமிழ் மொழியில் சொற்பிழை, பொருட்பிழை இன்றி குறைந்த காலத்திற்குள்ளாக மொழிபெயர்ப்பு சேவை சரியானதாகவும் சிறந்த தரத்திற்கும் மாறுவது என்பது இனி நம் அனைவரின் பங்களிப்பி்ல்தான் உள்ளது. Contribute a better translation.
source:http://nathikarai.blogspot.com/2011/06/contribute-better-tamil-translation.html

tislam- New Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 2
ஸ்கோர் : 5046
Points : 4
Re: கூகுள் தமிழுக்கு பங்களிப்பு(contribute) செய்வோம்
அருமையான பதிவு...
நிச்சயமாக நமது பங்களிப்பும் இருந்தால்தான் இந்த மொழிபெயர்ப்பு சேவை முழுமை பெரும்.

Similar topics
» ஜிமெயிலில் கூகுள் ப்ளஸ் வசதிகள்
» இனி ஒரு வழி செய்வோம் !
» ஸுஜுது செய்வோம் !
» பாகிஸ்னுடனான உறவை ஆய்வு செய்வோம்: ஒபாமா
» இனி ஒரு வழி செய்வோம் !
» ஸுஜுது செய்வோம் !
» பாகிஸ்னுடனான உறவை ஆய்வு செய்வோம்: ஒபாமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum