14 முன்னாள் தாலிபான் தலைவர்களை ஐ.நா கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்கியது
Page 1 of 1

ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்ட 14 முன்னாள் தாலிபான் தலைவர்களின் பெயரை கறுப்பு பட்டியலில் இருந்து ஐ.நா நீக்கம் செய்துள்ளது.
ஆப்கான் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தாலிபானை தூண்டுவதற்காக இந்நடவடிக்கை. ஆப்கான் அரசு கடந்த செப்டம்பரில் உருவாக்கிய அமைதி குழுவின் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய ஐ.நாவின் சிறப்பு தடை குழு இம்முடிவை மேற்கொண்டுள்ளது.
போராட்டத்தை நிறுத்திவிட்டார்கள் என ஆப்கான் அரசால் அறிவிக்கப்பட்ட 14 பேரின் பெயர்களை கறுப்புப்பட்டியலிருந்து நீக்குவதற்கு அனுமதி அளித்துள்ளதாக பாதுகாப்பு கவுன்சிலில் தலைமைப் பதவியை வகிக்கும் ஜெர்மன் பிரதிநிதி பீட்டர் விட்டிங் அறிவித்துள்ளார். ஐ.நாவின் கறுப்புப்பட்டியலிருந்து நீக்க தாலிபான் தலைவர்கள் 20 பேரின் பெயர்களை ஆப்கான் அரசு அளித்திருந்தது.
அமைதி நடவடிக்கைக்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த சுவடாக அமைதிக்கான குழு உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் தாலிபான் ஆட்சியில் அமைச்சர்களை உட்படுத்தி இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு ராணுவம் வெளியேறாமல் பேச்சுவார்த்தை இல்லை என தாலிபான் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கானை விட்டு வெளியேறினர்.
அமெரிக்காவின் நிர்பந்தம் மூலம் தாலிபான் மற்றும் அல்காயிதா தலைவர்களின் பட்டியலை தனித்தனியாக பாதுகாப்பு கவுன்சில் தயாராக்கியிருந்தது. தாலிபானின் பட்டியலில் 137 பேர் உள்ளனர். இதன் மீது நடத்தப்பட்ட விவாதத்திற்கு பிறகு இம்முடிவை மேற்கொண்டதாக பீட்டர் விட்டிங் தெரிவித்துள்ளார்.

Similar topics
» முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?
» சு.சுவாமியின் பாடங்களை ஹார்வர்டு பல்கலைகழகம் நீக்கியது
» தவறான இந்திய வரைபடம்: அமெரிக்கா நீக்கியது
» பலஸ்தீனர்களைப் பள்ளிவாயிலில் இருந்து விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
» பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை பிரித்த நார்வே அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum