தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மும்பை:துப்பு கிடைத்துள்ளது-ராகேஷ் மரியா

Go down

மும்பை:துப்பு கிடைத்துள்ளது-ராகேஷ் மரியா   Empty மும்பை:துப்பு கிடைத்துள்ளது-ராகேஷ் மரியா

Post by முஸ்லிம் Sun Jul 17, 2011 2:52 pm

மும்பை:நாட்டை அதிர்ச்சியடையச் செய்த மும்பை தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்களை குறித்த முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மஹாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ராகேஷ் மரியா அறிவித்துள்ளார்.

மும்பை தொடர்குண்டுவெடிப்பு விசாரணை தொடர்பாக மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ராகேஷ் மரியா நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:குண்டு வெடித்த மூன்று இடங்களிலும் தடயவியல் நிபுணர்கள் முழுமையாக சோதனை நடத்தி விட்டனர். விசாரணை அதிகாரிகளும் அங்கு தடயங்களை ஆராய்ந்து விட்டனர். இந்த சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதல் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் சில உபயோகமான தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணை சரியான பாதையில் செல்கிறது. எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான விடியோவை தொடர்ந்து பரிசோதித்து வருகிறோம். சம்பவத்துக்கு இருநாள்கள் முன்பு எடுக்கப்பட்ட பதிவுகளும் ஆராயப்பட்டு வருகின்றன. அதில் உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என்றார் அவர். குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேகிக்கப்படும் நபர்களின் உருவ வரை படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவை விசாரணை அதிகாரிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

குண்டு வெடித்த இடத்தில் இருந்து வலுவான உலோகப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில்தான் வெடிகுண்டு இருந்திருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அம்மோனியம் நைட்ரேட், குரூட் ஆயில், டிஜிட்டல் டைமர் ஆகியவை வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு மாநிலங்களில்…

உத்தரப் பிரதேசம், குஜராத், தில்லி, மேற்கு வங்கம், ஆந்திரம், கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர். விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்புகள், அனைத்து மாநில போலீஸாரின் உதவியையும் கேட்டுள்ளோம்.இவ்வாறு ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் வெடிகுண்டில் சிக்கி படுகாயமடைந்த பாபுலால் தாஸ் (42), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.

ஜவேரி பஜாரில் குண்டு வெடித்த இடத்துக்கு மிக அருகில் இந்த பைக் கிடந்தது. குண்டு வெடித்ததில் இந்த பைக்கின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்திருந்தது.

இந்த பைக், மும்பையின் நாக்பாதா பகுதியைச் சேர்ந்த அசோக் ஜெயினுக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரது உறவினர் அனிகெட் ஜெயின் பைக்கை குண்டு வெடித்த இடத்துக்கு அருகில் மாலை 3 மணியளவில் நிறுத்திச் சென்றுள்ளார். குண்டு 6.55 மணிக்கு வெடித்துள்ளது. அசோக் ஜெயினை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் வெள்ளிக்கிழமை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பைக் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீஸார் சரி பார்த்தனர்

அதில் பைக்குக்கான காப்பீடு காலாவதியாகி 2 மாதங்கள் ஆகியுள்ளது தெரியவந்தது. ஜவேரி பஜாரில் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், பைக் ஒன்றின் மீது வைக்கப்பட்டிருந்த குடையில்தான் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது என சந்தேகிக்கப்படுகிறது.இந்த பைக் குஜராத் மாநிலத்தில் பதிவுச்செய்யப்பட்டது நேற்று முன்தினம் தெரியவந்தது.

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். விசாரணைக்கு பாகிஸ்தான் முழு உதவியும் அளிக்கும் என மாலிக் உறுதி அளித்தார்.

மும்பை:துப்பு கிடைத்துள்ளது-ராகேஷ் மரியா   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11125
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum