கட்டாய மதமாற்றம்:பஜ்ரங் தள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் மீது முஸ்லிம் பெண் புகார்
Page 1 of 1

மங்களூர்:கர்நாடகா மாநிலம் மங்களூரில் வளச்சில் அருகே அட்யார் கண்ணூர் என்ற பகுதியைச் சார்ந்த மறைந்த இப்ராஹீம் என்பவரின் மகள் புஷ்ரா. இவர் ஓட்டுநராக பணிபுரிந்த பிரசாந்த் ஷெட்டி என்பவரை காதலித்து பின்னர் அவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றி திருமணம் புரிந்தார். பிரசாந்த் ஷெட்டி தனது பெயரை ஜாஃபர் என மாற்றிக்கொண்டார். இவர்களது திருமணம் நடந்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இவர்களுக்கு இக்பால் (4), இர்ஃபான் (3), ஃபாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன்(ஒன்றரை மாதம்) ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் வாழ்க்கை சுமூகமாகவே சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஜாஃபர் என்ற பிரசாந்த் ரெட்டி சமீப வருடங்களாக பஜ்ரங்தள் ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலுடன் நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார். பின்னர் தாங்கள் வசித்துவந்த அட்யார் கண்ணூரில் உள்ள வீட்டிலிருந்து புஷ்ராவின் விருப்பத்தை பொருட்படுத்தாமல் உடுப்பியில் உள்ள சன்க காட்டே என்ற இடத்தில் மூன்று மாதத்திற்கு முன்பு மாறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி வீட்டில் புஷ்ரா சமையல் செய்துகொண்டு இருக்கும் வேளையில் பஜ்ரங் தளத்தைச் சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வீட்டில் அத்துமீறி நுழைந்து புஷ்ராவையும் குடும்பத்தினரையும் வலுக்கட்டாயமாக கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். இதனை புஷ்ரா எதிர்த்தபொழுது அவரது குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பயந்துபோன புஷ்ரா அவர்களின் விருப்பத்திற்கு ஒத்துழைத்துள்ளார். பின்னர் புஷ்ராவின் கோரிக்கையை காதில் வாங்கிக்கொள்ளாமலேயே கோயிலில் உள்ள பூஜாரி ’ப்ரவர்தான்(மதமாற்றம்) சடங்குகளை’ நடத்தியுள்ளார்.
கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார். இதைக் காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் தான் இந்து மதத்திற்கு மாறவில்லை எனவும் தற்போது முஸ்லிமாகவே வாழ்வதாக தெரிவிக்கிறார்.
இதுக்குறித்து புஷ்ரா ஐ.ஜி.பி அலோக்மோகனிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் தனது வீட்டை கணவராக இருந்த ஜாஃபர் என்ற பிரசாந்த் ரெட்டி மாற்றியவுடன் மனோகர் என்ற பஜ்ரங்தள் பயங்கரவாதி தனது கணவரின் உதவியுடன் தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமை இழைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் தனது கணவனின் அனுமதியுடன் வரும் மனோகர் பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும் புஷ்ரா புகார் அளித்துள்ளார். தற்போது தனது கணவரிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவாகரத்து கோரியுள்ளார். இனிமேல் தனது கணவருடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும், இதை போலீசில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்று விடப்போவதாக தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர். புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் ஐ.ஜி.பி அலோக் மோகன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Similar topics
» போலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்
» இஸ்லாமோஃபோபியா:விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் – விமான நிறுவனம் மீது வழக்கு!
» பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்யவேண்டும் – மஜ்லிஸே முஷாவரா
» எகிப்து: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் கட்சிக்கு அங்கீகாரம்
» மோடி அரசு மீது ஐ.பி.எஸ் அதிகாரி புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum