டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி மரணம்
Page 1 of 1
டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி மரணம்
புதுடெல்லி:பொருளாதார துறை அறிஞரும், ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவருமான டாக்டர் ஃபஸலுர்ரஹ்மான் ஃபரீதி மரணமடைந்தார். அவருக்கு வயது 80 ஆகும்.
1932-ஆம் ஆண்டு ஜோன்பூரில் பிறந்த அவர் ராம்பூரில் இஸ்லாமிய கல்வி கலாச்சாலையிலிருந்து அரபி மொழியும், இஸ்லாமிய பாடங்களையும் கற்றார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும், முனைவர்(டாக்டர்) பட்டமும் பெற்றார். சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ள கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பேராசிரியராக பணியாற்றினார்.
இன்ஸ்ட்யூட் ஆஃப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸின் கவேர்னிங் கவுன்சிலின் உறுப்பினராக பதவி வகித்தார். ஐ.ஒ.எஸ் ஜெர்னலின் எடிட்டராகவும் பதவி வகித்துள்ளார். அலிகர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றும் வேளையில் ஓய்வுப்பெற்றார்.
ஆங்கிலத்திலும், உருதுவிலும் ஏராளமான நூல்களை எழுதியுள்ள ஃபரீதி ஏராளமான ஆய்வு படிப்புகளுக்கு கண்காணிப்பாளராக இருந்துள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் கீழ் செயல்படும் இந்தியன் அசோசியேசன் ஃபார் இஸ்லாமிக் இக்னாமிக்ஸின் சேர்மனாகவும், ஆங்கில பத்திரிகையின் எடிட்டராகவும், சிந்தரி நவ் என்ற வாரப் பத்திரிகையின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார்.
நீண்டகாலமாக ஜமாஅத்தே இஸ்லாமியின் மத்திய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக பதவி வகித்தார். இன்று அவரது உடல் அலிகரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Similar topics
» வஹ்ததே இஸ்லாமியின் உறுப்பினர்கள் கைது முஸ்லீம் இயக்கங்களை ஒடுக்கும் சதி : அதாவுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
» அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக். டாக்டர் விரைவில் விடுதலை
» டாக்டர் கலீல் ஜிஸ்தியை விடுதலை செய்ய வேண்டும்-மகேஷ் பட்
» டாக்டர்.கலீல் ஜிஸ்தியின் விடுதலைக்காக சோனியா தலையிடவேண்டும்-கட்ஜு
» உள்ளுக்குள் முஸ்லிம் வெளியே கிருத்துவர்-டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum