ரமளான் சிந்தனைகள்
Page 1 of 2 • 1, 2
ரமளான் சிந்தனைகள்
பிறை-1
ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. மேலும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது (நூல் : புகாரி )
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி, முஸ்லிம் - அபூ ஹுரைரா (ரலி)
"நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்)"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Re: ரமளான் சிந்தனைகள்
பிறை-2
“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (அல்-குர்ஆன்-2:185)
"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!"
என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Re: ரமளான் சிந்தனைகள்
பிறை-3
“(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184''
"நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில்உண்ணவோ பருகவோ செய்து விட்டால்(நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்)மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும்,ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும்செய்திருக்கின்றான். நபி (ஸல்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா
நூல்:புகாரி,
"”நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!” ‘என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். "
நூல்: புகாரி 1923.
Re: ரமளான் சிந்தனைகள்
“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183''
"நீங்கள் நோன்பு திறக்கும் போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி)
நூல்:திர்மிதீ, அபூதாவூது
"ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!" என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!" "
என்று கூறினார்கள்
Re: ரமளான் சிந்தனைகள்
பிறை-5
“நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).''
"ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?' என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால்விட்டுவிடு" என்றார்கள்.
நூல்:புகாரி
"இரவு உணவு வைக்கப்பட்டால், மஃக்ரிப் தொழுவதற்கு முன் சாப்பாட்டிற்கு முதலிடம் கொடுங்கள், உணவு உட்கொள்வதைத் தாமதிக்க வேண்டாம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) "
நூல்- புகாரி.
Re: ரமளான் சிந்தனைகள்
பிறை-6
“ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183.''
"நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப்பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது.அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிடமுற்பட்டால் “நான் நோன்பாளி” என்றுகூறி விடவும். நபி (ஸல்)
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி)
புகாரி,
"நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான்கண்டுள்ளேன்.
அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ(ரழி)
நூல்:அபூதாவூது, திர்மிதீ.
Re: ரமளான் சிந்தனைகள்
பிறை-7
“எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி''
"நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்
"நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான்பார்த்தேன்.
அறிவிப்பவர்:மாலிக் (ரழி)
நூல்:அபூதாவூது
.
Re: ரமளான் சிந்தனைகள்
பிறை-8
“ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால்,
இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது.
ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான்.
நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது.
நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது.
நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது.
நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி)
நூல் : அஹமது, இப்னு கதீர்''
"எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்.
நூல் : அஹமத், அபூதாவுத்
"அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள்.
அறிவிப்பவர்:இப்னு உமர் (ரழி)
நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
.
Re: ரமளான் சிந்தனைகள்
பிறை-9
“நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்''
"‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை
சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி)
"‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு
ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு
பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’
என நபிகளார் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
.
Re: ரமளான் சிந்தனைகள்
“
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நேற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள். நூல் : (புஹாரி)''
"‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்:அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன்.அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜைது பின் தாபித்(ரழி)
நூல்: புகாரீ,முஸ்லிம்
"‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ‘தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் குழந்தைகள், தன்னில், தன்
அண்டை வீட்டார் ஆகியோர் விஷயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு
தொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் ஆகியவை பரிகாரமாக
அமைகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: புஹாரி).
Re: ரமளான் சிந்தனைகள்
“
‘ரமழானின் முதல் இரவு வந்து விடுமானால் ஷைத்தான்களும், அட்டூழியம்
புரியும் ஜின்களும் விழங்கிடப்படுகின்றனர். நரகத்தின் அனைத்து வாயில்களும்
மூடப்படும் அதில் ஏதும் திறக்கப்படமாட்டாது, சுவர்க்கத்தின் அனைத்து
வாயில்களும் திறக்கப்படும் அதில் ஏதும் மூடப்படமாட்டாது. ஓர் அழைப்பாளர்
நன்மையை விரும்புபவர்களே அதிகம் நன்மை செய்யுங்கள், பாவங்களை
விரும்புபவர்களே பாவங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அழைப்பு
விடுப்பார். ஒவ்வொரு இரவும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை
செய்யப்படுகின்றனர்.’ என நபிகள் நாயகம் (ஸல்ய) அவர்கள் கூறினார்கள்
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா).''
"‘அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து '(என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?)" என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?' என்று கேட்டார்கள். அவர் 'இயலாது!" என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை" என்றார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டு வரப்பட்டது. 'இதை உம் சார்பாக வழங்குவீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர் 'எங்களை விட ஏழைக்கா? மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடையோர் வேறு யாரும் இல்லை!" என்று கூறினார். 'அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ
"‘ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு (அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பை விட்டதற்கு) பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்' என்ற 2:184 வது வசனத்தை ஓதிக்காட்டி, இது மாற்றப்பட்ட வசனம் அன்று. நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும், அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (நூல்: புகாரி 4505)'
Re: ரமளான் சிந்தனைகள்
“
‘அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர்.
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.
''
"‘துல் ஹஜ், ரமழான் ஆகிய பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்போல்
குறையாது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா
(ரலி), புஹாரி).
இந்த ஹதீஸுக்கு இஸ்ஹாக் (ரஹ்) விளக்கமளிக்கும் போது:
(எண்ணிக்கையில் இருபத் தொன்பது நாட்களாகக் குறைந்தாலும் (நன்மையில்) அது
நிறைவானதாகும்’ என்று இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்.
"‘‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்.
நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும்
தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும்
‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை
செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
Re: ரமளான் சிந்தனைகள்
“
1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ
"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".
அல்லாஹ்வே! கிருபையாளர்களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.
2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வகஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".
அல்லாஹ்வே! அகிலத்தார்களின் இரட்சகனே!எங்களுடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.
3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்".
அல்லாஹ்வே! அகிலத்தார்களின் இரட்சகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!
குறிப்பு
மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது.
Re: ரமளான் சிந்தனைகள்
“
‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக்
கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று
ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).
Re: ரமளான் சிந்தனைகள்
“
‘‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு
மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக
அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
Re: ரமளான் சிந்தனைகள்
“
‘‘அல்லாஹ்வின் வழியில் ஒருவர் ஒரு நாள் நோன்பு வைத்தால், அந்த நாளிற்கு
பகரமாக அவரின் முகத்தை நரகத்தை விட்டும் எழுபது ஆண்டுகள் அல்லாஹ்
தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அபூஸயீதுல் குத்ரி (ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).
Re: ரமளான் சிந்தனைகள்
‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம்
செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும்,
மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத்
தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ
அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு
பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
Re: ரமளான் சிந்தனைகள்
‘நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
நீங்கள் ரமழான் பிறையைக்கண்டு நோன்பு பிடியுங்கள், ஷவ்வால் பிறையைக்கண்டு
நோன்பை விடுங்கள். உங்களுக்கு பிறை தென்படாவிட்டால் ஷஃபான் முப்பது
நாட்களை பூர்த்தி செய்யுங்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி,
முஸ்லிம்).
‘மனிதர்கள் பிறையை பார்த்தனர், நான் பார்த்ததை நபிகளார் (ஸல்)
அவர்களுக்கு அறிவித்தேன். நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தார்கள்,
மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.’ (அறவிப்பவர்: இப்னு உமர்
(ரலி), ஆதாரம்: அபூதாவுத், தாரமி, இப்னு ஹிப்பான், ஹாகிம்).
Re: ரமளான் சிந்தனைகள்
‘(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும்,
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான
தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி,
நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.’ (3: 17).
‘அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்க
மாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (ஸஹர் நேரத்தில் அல்லாஹ்விடம்)
மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.’ (51: 17,18).
ஓவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது
எமது ரப் (அல்லாஹ்) துன்யாவின் வானத்திற்கு இறங்கி, என்னிடம் யார்
பிரார்த்திப்பார்களோ அவர்களது பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன்,
என்னிடம் கேட்கக்கூடியவர்களுக்கு நான் கொடுப்பேன், என்னிடம் பாவ மன்னிப்பு
தேடுபவர்களுக்கு நான் மன்னிப்பை வழங்குவேன்.’ என கூறுவதாக நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்:
புஹாரி).
Re: ரமளான் சிந்தனைகள்
நீஙகள் ஸஹ்ர் செய்யுங்கள், ஏனெனில் ஸஹ்ர் உணவில்
பரக்கத் உள்ளது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).
அல்லாஹ் அருள் புரிகிறான்:
‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு
மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்
ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில்
அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அஹ்மத்). முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது
கவலையான விடயமாகும்.
‘நமது நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள
வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்).
Re: ரமளான் சிந்தனைகள்
‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு
திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்தோம். பின்பு
தொழுகைக்காக நாங்கள் நின்றோம் என்ற ஸைத் (ரலி) கூறியதும்,
‘அவ்விரண்டுக்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?’ என்று
கேட்கப்பட்டது. ‘ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு’ என்று பதில் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித் (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).
ஸஹ்ல் பின் ஸஃத் (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘நான் என்
குடும்பத்தாருடன் ஸஹர் செய்து விட்டு நபி (ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத்
தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்’ (புஹாரி).
நபி (ஸல்) அவர்களிடம் பாங்கு கூறுபவர்கள் இருவர் இருந்தனர்.
‘பிலால் (ரழி) அவர்கள் (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு
சொல்வார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள். ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு
சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ர் (வைகறை)
நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்’ என்று குறிப்பிட்டார்கள்.’
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).
Re: ரமளான் சிந்தனைகள்
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?.கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல் குர்ஆன் 97: 1-5)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!" என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 2014).
உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், "லைலதுல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன் அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!" எனக் கூறினார்கள். (புஹாரி 2023)
இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரை கண்ட விசயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர் (ரமளானில்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!" என்று கூறினார்கள். (புஹாரி 2015).
Re: ரமளான் சிந்தனைகள்
இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'அல்லாஹ்வின் தூதரே! மஸ்ஜிதுல் ஹரமில் ஒரு இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக்காலத்தில் நான் நேர்சை செய்திருந்தேன்' என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்!' என்றார்கள். (பிறகு) உமர்(ரலி) ஒரு இரவு இஃதிகாஃப் இருந்தார்கள்.
நூல்: புஹாரி (2042)
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புஹாரி (2020)
"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!"
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புஹாரி (2026)
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: புஹாரி
Re: ரமளான் சிந்தனைகள்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.
நூல்: முஸ்லிம் (2007)
அபூஸயீத்(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் நாள் முடிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல்: புஹாரி (2018)
"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!"
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புஹாரி (2026)
ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். 'சுப்ஹு' தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா(ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார்கள். ஸைனப்(ரலி) அவர்களும் இதனைக் கேள்விப்பட்டு மற்றொரு கூடாரத்தை அமைத்துக் கொண்டார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு, "இவை என்ன?" என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்வதற்கு நற்செயல் புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!" என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. (பிறகு) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமலானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.
நூல் : புஹாரி (2041)
Re: ரமளான் சிந்தனைகள்
"பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்". (அல்குர்ஆன் 2:187)
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் (வாருவதற்காக) நீட்டுவார்கள்; நான் வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவைப்பட்டாலே தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள். நூல்: புஹாரி (2029)
ஸபிய்யா(ரலி) அவர்கள் கூறினார்கள்
நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருக்கும் போது அவர்களிடம் நான் சென்று, சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன் (ஹதீஸின் சுருக்கம்
நூல்: புஹாரி (2035)
மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்" என்று உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "உமது நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி); நூல் : புஹாரி (2032)
Page 1 of 2 • 1, 2
» ரமளான் மாதத்தின் சிறப்புகள்!!!
» ரமளான் மாதத்தின் சிறப்பு !
» ரமளான் சிறப்புப் புகைப்படங்கள்-Must see