பீகாரில் பள்ளிக்குழந்தைகள் படிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் புத்தகங்கள்
Page 1 of 1

பாட்னா:ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஹிந்துத்துவத்தை புகழும், சங்க்பரிவார தலைவர்களை வாழ்த்தும் புத்தகங்களை நிதீஷ்குமாரின் அரசு பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேசவபல்ராம் ஹெட்கோவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் உள்ளது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்ஸை அறிமுகப்படுத்துவதுதான் நோக்கம். சங்க்பரிவார அரசியலை அறிமுகப்படுத்தும் ஹிந்துத்துவாவும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் ’கோத்ரா – தி மிஸ்ஸிங் ரேஜ்’ ஆகியன இதர முக்கிய புத்தகங்களாகும்.
இப்புத்தகங்கள் மாணவர்களிடையே துவேஷத்தையும், தாக்குதல் வாசனையையும் உருவாக்கவும் உதவும் என ஜனதாதள எதிர்ப்பு தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான உபேந்திரா குஷ்வாஹ குற்றம் சாட்டியுள்ளார்.
நிர்பந்த அரசியலுக்கு அடிபணிந்து மதசார்பற்றக் கொள்கையை பீற்றிக்கொள்ளும் நிதிஷ்குமார் மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களை படிக்க வைத்துள்ளார் எனவும், அபாயகரமான இந்த முயற்சியிலிருந்து அரசு உடனடியாக வாபஸ்பெறவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். புதிய அரசியல் கட்சியான பீகார் நவநிர்மாண் மஞ்சின் கண்வீனராகவும் உபேந்திரா உள்ளார்.
எட்டு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பாடப்புத்தகங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum