மேலப்பாளையம் சந்தையில் வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதாக வதந்தி!
Page 1 of 1

மேலப்பாளையம் மாட்டு சந்தையில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்குப் பொய் தகவலை சில விஷமிகள் கொடுத்தையடுத்து அங்கு 2 மணிநேரம் சோதனை நடந்தது.
நெல்லை மேலப்பாளையத்தில் செவ்வாய்கிழமை தோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். செவ்வாயன்று அதிகாலை 3 மணி முதலே சந்தை களைக்கட்டி விடும். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஆடு, மாடு, கோழிகளை விற்கவும், வாங்கவும் இச்சந்தைக்கு வருவதுண்டு. இந்நிலையில் காலையில் மாட்டு சந்தையில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சில விஷமிகள் வதந்தியைக் கிளப்பி விட்டனர்.
இதைத் தொடர்ந்து மாநகர கமிஷனர் வரதராஜூ உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மாஸ்டர்ன்லி யோ, மேலப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் பற்குணம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழு அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியது. மெட்டல் டிடெக்டர் மூலம் சுமார் 2 மணிநேரம் அங்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. பிற்பகல் 2 மணி வரை காவல்துறையினர் சோதனை நடத்தினர். தேவையில்லாமல் வதந்தி பரப்பி பரப்பரப்பை ஏற்படுத்தியவர்களைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்நேரம்

Similar topics
» மதுரை: அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பு
» பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் விகடன்!
» இரான் அணு விஞ்ஞானி கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்!
» இந்தோனேஷியா மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி!
» வெடிக்காத நிலையில் விமான நிலையத்தில் 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum