தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அணுகுண்டு ஏற்படுத்திய பயங்கரத்தை நினைவுக்கூறும் நாகசாகியில் பாதிக்கப்பட்டவர்களின் சங்கமம்

Go down

அணுகுண்டு ஏற்படுத்திய பயங்கரத்தை நினைவுக்கூறும் நாகசாகியில் பாதிக்கப்பட்டவர்களின் சங்கமம்   Empty அணுகுண்டு ஏற்படுத்திய பயங்கரத்தை நினைவுக்கூறும் நாகசாகியில் பாதிக்கப்பட்டவர்களின் சங்கமம்

Post by முஸ்லிம் Tue Aug 09, 2011 2:35 pm

நாகசாகி:”அணுசக்தியின் விபத்தைக்குறித்து ஜப்பான் நாட்டவர்களான நாங்கள்தாம் முதலில் பேசவேண்டும்”-நாகசாகியில் காலணியாதிக்க அமெரிக்கா நடத்திய அணுகுண்டு வீச்சில் தப்பிய 81 வயதான ஹிரோஸ் கூறுகிறார்.

உலக மக்களை இன்றைக்கும் நடுங்கச்செய்யும் அந்த பயங்கரமான நிகழ்வை நினைவுக்கூற நேற்று முன் தினம் நாகசாகியில் நேரடி சாட்சிகளும், பலியானவர்களின் உறவினர்களும் சங்கமித்தனர்.இன்று உலக மக்கள் சமூகம் நாகசாகியில் நிகழ்ந்த பயங்கரத்தின் 66-வது நினைவு தினத்தை கடைப்பிடிக்கிறது.

அன்று உயர்நிலை பள்ளிக்கூட ஆசிரியராக பணியாற்றிய ஹிரோஸ் தனது தந்தைவழி சகோதரி இரத்தம் கக்கி இறந்த சம்பவத்தை அங்கே விவரிக்கிறார்.அணுகுண்டு வீச்சில் ஹிரோஸ் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அணுசக்தி தேவை என்பதற்கு ஆதரவாளராக இருந்தவர். ஆனால், புகுஷிமாவில் அணுசக்தி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அணுசக்தி திட்டத்தின் எதிர்ப்பு பிரச்சாரகராக மாறிவிட்டார் அவர்.’கதிர் வீச்சின் எதிர்விளைவுகளை குறித்து உலகத்திற்கு எச்சரிக்கை விடுக்க ஜப்பானில் அடிக்கடி விபத்து நடப்பது இந்நாட்டின் தலைவிதியா? என அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஒரேநாளில் நாற்பதினாயிரம் மனித உயிர்கள் நாகசாகியில் பலியாகின. ஜப்பான் வெளியிட்ட புள்ளிவிபரப்படி அணுகுண்டு வீசப்பட்ட வருடம் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்டவர்களை விட பல மடங்கு அதிகமான மக்கள் அதன் விளைவுகளை இன்றும் அனுபவித்துவருகின்றனர்.

1945 ஆகஸ்ட் 6-ஆம் தேதி அணுகுண்டு தாக்குதலின் மூலம் ஹிரோஷிமாவை சாம்பலாக்கிய பிறகு ஒன்பதாம் தேதி நாகசாகியிலும் ஏகாதிபத்தியம் குண்டுவீசி கருகச்செய்தது. இன்று நாகசாகியில் பீஸ் மெமோரியலில் நடக்கும் வருடாந்திர நினைவு தினத்தில் முதன் முறையாக அமெரிக்க பிரதிநிதி ஒருவர் பங்கேற்கிறார்.

அணுகுண்டு ஏற்படுத்திய பயங்கரத்தை நினைவுக்கூறும் நாகசாகியில் பாதிக்கப்பட்டவர்களின் சங்கமம்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11073
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum