அன்னாவின் போராட்டமும் குழுவும் செயற்கையானது : 11 வருடங்களாய் உண்ணாவிரதம் இருக்கும் ஐரம் ஷர்மிளா
Page 1 of 1

இம்பால் : ஒட்டு மொத்த இந்தியாவும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத வெற்றி களிப்பாட்டத்தில் மூழ்கி கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான குரல்கள் ஊடகங்களிலும் மக்களிடத்திலும் எடுபடாமல் போவது இயற்கையே. 3,763 நாட்களாய் சுமார் 11 வருடங்களாய் உண்ணாவிரதம் இருக்கும் மணிப்பூரின் இரும்பு பெண்மணி ஐரம் ஷர்மிளாவோ அன்னாவின் போராட்டம் செயற்கையானது என்கிறார்.
மணிப்பூரில் இந்திய ராணுவத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை பயன்படுத்தி இந்திய ராணுவம் அங்குள்ள பெண்களை வன்புணர்வு செய்வதாகவும், கொடுமைகள் புரிவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்திய ராணுவத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள வரைமுறையற்ற அதிகாரத்தை வழங்கும் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென்று கடந்த 11 வருடங்களாய் ஐரம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த போது அதில் கலந்து கொள்ள ஷர்மிளாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற காவலில் இருந்ததால் ஷர்மிளாவால் அதில் பங்கு கொள்ள முடியவில்லை. ஹசாரே இயக்கத்தை பற்றி கேட்கப்பட்ட போது அவ்வியக்கம் செயற்கையானது என்றும் ஒரு சட்டத்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்றும் கேட்டார். மேலும் தான் ஓர் சாதாரண பெண்மணி என்றும் சமூகத்தை சீரமைப்பதே தன் பணி என்றும் தெரிவித்தார்.
ஹசாரேவின் இயக்கம் குறித்து தனக்கு திருப்தி இல்லையென்றாலும் அவர் மணிப்பூர் வருவது குறித்து தனக்கு ஆட்சேபணை இல்லையென்றும் கூறிய ஷர்மிளா சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவதாக 2004 ஆண்டு கூறிய பிரதமர் தன் வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்றும் ஒரு பிரதமரே தன் வாக்குறுதியை காப்பாற்ற தவறுவது அவமானம் என்றும் தெரிவித்தார்.
இந்நேரம்

Similar topics
» அன்னாவின் போராட்டம் ப்ளாப்பான வியாபாரம் : லல்லு
» மோடி உண்ணாவிரதம் : ஜெயலலிதா ஆதரவு
» அஃப்ஸல் குருவுக்கு மரணத்தண்டனை:எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஹுர்ரியத் எச்சரிக்கை
» எடியூரப்பா பற்றிய கேள்விகளை தவிர்க்கவே அன்னாவின் மெளனவிரதம் : திக்விஜய் சிங்
» மோடியின் சத்பாவனா உண்ணாவிரதம்(?)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum