மோடி உண்ணாவிரதம் : ஜெயலலிதா ஆதரவு
Page 1 of 1
மோடி உண்ணாவிரதம் : ஜெயலலிதா ஆதரவு
சமூக நல்லிணக்கம் என்ற நோக்கத்துக்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கு தனது முழு ஆதரவை
தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத நிகழ்வில் தமிழக முதல்வரும்,
அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா சார்பில், அதிமுக நாடாளுமன்ற கட்சி
தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் இன்று கலந்துகொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்துச் செய்தியை அளித்துப் பேசிய தம்பிதுரை,
"குஜராத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே வர்த்தகத் தொடர்பு நெடுநாட்களாக
இருந்து வருகிறது.
தமிழகத்தில் 3-வது முறையாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வரான போது,
அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் நரேந்திர மோடி கலந்து கொண்டு வாழ்த்து
தெரிவித்தார். அதனால் அவர், எங்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வரச்
சொல்லியிருந்தார். மோடிக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறோம்," என்றார்.
அமெரிக்காவும் மோடியைப் பாராட்டியிருப்பது, அவர் மேற்கொண்ட வளர்ச்சிப்
பாதைக்கும், அவரின் நிர்வாகத்திறனுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை. அவரது
முயற்சி வெற்றிபெற தமிழக முதல்வரின் வாழ்த்தைத் தெரிவிக்கிறோம்," என்றார்
தம்பிதுரை.
தமது ஒத்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூக நல்லணக்கத்துக்காகவே மோடி
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்றும், இதில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை
என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா
தனது பிரதிநிதிகளை நேரில் அனுப்பியதற்கு அத்வானி நன்றி
தெரிவித்துக்கொண்டார்.
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கு தனது முழு ஆதரவை
தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
| |||
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத நிகழ்வில் தமிழக முதல்வரும்,
அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா சார்பில், அதிமுக நாடாளுமன்ற கட்சி
தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் இன்று கலந்துகொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்துச் செய்தியை அளித்துப் பேசிய தம்பிதுரை,
"குஜராத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே வர்த்தகத் தொடர்பு நெடுநாட்களாக
இருந்து வருகிறது.
தமிழகத்தில் 3-வது முறையாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வரான போது,
அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் நரேந்திர மோடி கலந்து கொண்டு வாழ்த்து
தெரிவித்தார். அதனால் அவர், எங்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வரச்
சொல்லியிருந்தார். மோடிக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறோம்," என்றார்.
அமெரிக்காவும் மோடியைப் பாராட்டியிருப்பது, அவர் மேற்கொண்ட வளர்ச்சிப்
பாதைக்கும், அவரின் நிர்வாகத்திறனுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை. அவரது
முயற்சி வெற்றிபெற தமிழக முதல்வரின் வாழ்த்தைத் தெரிவிக்கிறோம்," என்றார்
தம்பிதுரை.
தமது ஒத்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூக நல்லணக்கத்துக்காகவே மோடி
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்றும், இதில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை
என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா
தனது பிரதிநிதிகளை நேரில் அனுப்பியதற்கு அத்வானி நன்றி
தெரிவித்துக்கொண்டார்.
Similar topics
» துவாரகையில் நரேந்திர மோடி மீண்டும் உண்ணாவிரதம்
» அமைதி, ஒற்றுமைக்காக மூன்று நாள் உண்ணாவிரதம்! மோடி
» மோடி போன்ற நபர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற வரும் வெள்ளியன்று உண்ணாவிரதம்
» ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு’ சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
» மோடியின் சத்பாவனா உண்ணாவிரதம்(?)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum