தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழகத்திலிருந்து 3818 பேர் புனித ஹஜ் பயணம்! அமைச்சர் முகமது ஜான்

Go down

தமிழகத்திலிருந்து 3818 பேர் புனித ஹஜ் பயணம்! அமைச்சர் முகமது ஜான்  Empty தமிழகத்திலிருந்து 3818 பேர் புனித ஹஜ் பயணம்! அமைச்சர் முகமது ஜான்

Post by முஸ்லிம் Wed Sep 21, 2011 4:10 pm




தமிழகத்திலிருந்து 3818 பேர் புனித ஹஜ் பயணம்! அமைச்சர் முகமது ஜான்  Makkahசென்னை:
இந்த வருடம் தமிழகத்திலிருந்து சுமார் 3818 பயணிகளும் புதுவையில் இருந்து
59 பயணிகளும் அந்தமானில் இருந்து 29 பயணிகளும் என 4088 பேர் புனித ஹஜ்
பயணத்திற்கு செல்கின்றனர் என அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார்.






பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ஏ.முகமது ஜான் தலைமையில். ‘ஹஜ்
2011’ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடந்தது. இதற்கு
அரசு செயாளர் சந்தானம், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர், மற்றும்
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலாளர் அலாவூதீன் கலந்துக்கொண்டனர்


இது
குறித்து அமைச்சர் முகமது ஜான் பேசியதாவது: இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ்
பயணம் 1.25 லட்சம் பேர் மேற்கொள்ள உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் 10
ஆயிரம் பேர் மனு செய்திருந்தனர். ஆனால், மக்கள் தொகை அடிப்படையில்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு 3057 ஆகும். இந்த இடத்தை அதிகரிக்க வேண்டும்
என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். அதன்
பயனாய் கூடுதலாக 761 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் தமிழ்நாட்டில்
இருந்து 3818 பேர் புனித பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில், பெண்கள்
1893 பேர் அடங்குவர்.


மேலும்
புதுச்சேரியில் இருந்து 59 பேரும், அந்தமானை சேர்ந்த 29 பேரும் சேர்த்து
சென்னையில் இருந்து 4088 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த
எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புனித பயணிகள் ஜெட்டா
செல்வதற்கு 14 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முதல் விமானம் அக்டோபர் 17ம்
தேதி புறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து விமானங்களும் அக்டோபர் 31ம்
தேதிக்குள் இயக்கப்படும் என்று கூறினார்


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» புனித பயணம் மேற்கொள்வோர் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீட்டுக்கு காத்திருக்காமல் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம்
» 21.03.2012 அன்று குவைத்திலி​ருந்து K-Tic புனித உம்ரா குழு பயணம்
» புனித பயணம் ஹஜ்க்கு சென்ற பெண்ணுக்கு விமான நிலையத்தில் குழந்தை பிறந்தது
» ஹஜ் புனித பயணத்திற்கு தமிழகத்திலிருந்து 3,049 பேர் தேர்வு!
» முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum