ஷீலா மசூத் குடும்பத்திற்கு ஆபத்து – ஆசிய மன்றம் (FORUM ASIA)
Page 1 of 1

போபால்:தகவல் அறியும் உரிமை ஆர்வலரும்
மற்றும் சமூக சேவகருமான ஷீலா மசூத் கொல்லப்பட்ட பிறகு அவரது
குடும்பத்தினரும் இப்போது ஆபத்தில் இருப்பதாக ஆசிய மாதரம் என்ற அமைப்பு
அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஷீலா மசூத்தின் குடும்பத்திற்கு இரண்டு
கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாக அவ்வமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் ஷீலா மசூத்தின் கொலையில் மத்திய பிரதேச மனித உரிமை ஆணையத்தின்
போக்கு தங்களை ஆச்சரிய படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அவ்வறிக்கை
கூறுகிறது.
ஆசிய மன்றம்(FORUM-ASIA) மணிலாவை
தலைமையிடமாக கொண்டு செயல்படும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளை உள்ளடக்கிய
ஒரு சுதந்திர அமைப்பாகும். இவ்வமைப்பு நேபாளத்தின் குண்டன் ஆர்யால்
பாங்காக்கின் பால்க்ரிஷ்ணா மற்றும் இந்தியாவின் ஸ்ருதி ஆகியோரைக் கொண்ட
மூன்றுபேர் குழுவை கடந்த செப்டம்பர் 17 முதல் 19 ஆம் தேதி வரை இங்கு
அனுப்பியிருந்தது.
ஷீலா மசூத்தின் கொலையை பற்றி அவருடைய
தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் தங்களுக்கு இரண்டு கொலை மிரட்டல் கடிதம்
வந்துள்ளதாக தெரிவித்ததாக குண்டன் ஆர்யால் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம்
கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் இப்பிரச்சனையை பெரிதாக்கக்
கூடாது என்று மிரட்டல் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு
வந்த இரண்டு மிரட்டல் கடிதங்களையும் போலீசிடம் ஒப்படைத்துள்ளதாகவும் மேலும்
ஷீலா மசூத்தின் கொலை திட்டமிட்டு நடந்துள்ளது என்றும் இதற்கு பின்னால் சில
செல்வாக்கு மிகுந்த நபர்கள் இருப்பதை இக்கடிதம் காண்பிப்பதாகவும் ஆர்யால்
தெரிவத்துள்ளார்.
ஷீலா மசூத் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி
அவரின் வீட்டின் முன்னால் காரில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு
கொல்லப்பட்டார். இக்கொலையில் பல தேசிய மற்றும் மாநில பிஜேபி-யின் தலைவர்கள்
பெயர்கள் சம்பதப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இருபது நாட்கள் போலிஸ்
விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கு சிபிஐ யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆசிய மன்றம் மசூத்தின் குடும்பத்தை
தவிர இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள், காவல்துறையினர், மாநில
மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை கழக
உறுப்பினர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து தகவல்களை சேகரித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
ஆசிய மன்றம் அளித்துள்ள அறிக்கை மிக
முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் இவ்வறிக்கை தேசிய மனித உரிமை
ஆணையத்திற்கு மட்டும் அழுத்தம் தரப் போவது இல்லை இவ்வறிக்கையை ஐநாவிடமும்
அளிக்க இக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் ஆசிய மன்ற விசாரணைக் குழு;
‘எந்த அமைப்பையும் குற்றம் சாட்டப் போவது இல்லை ஆனால் இவ்விவகாரம் தொடர்பான
சில உண்மைகள் அவர்களை ஆச்சரியப்பட வைப்பதாக உள்ளது’ என தெரிவித்துள்ளனர்.
இருபது நாட்கள் விசாரணை நடந்தும்
காவல்துறை இதுவரை எந்த குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை என்றும் இன்னும்
இக்கொலை பற்றி துப்பு எதுவும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை என்று ஆர்யால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வமைப்பின் உறுப்பினர்களில்
ஒருவரான ஸ்ருதி கூறுகையில் மத்திய பிரதேச மாநில மனித உரிமை ஆணையம்
இவ்வழக்கில் நடந்து கொள்ளும் விதம் தன்னை கவலைப்பட வைப்பதாக உள்ளது என
தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் விஜய் ஷக்ஹுல்
மசூத்தின் கொலையில் தங்களுடைய இயலாமையை வெளிப்படுத்தியுள்ளதும் மேலும் அவர்
இக்கொலை வழக்கை தரம் குறைக்க முயல்வதையும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்யால் கூறியதாவது; மசூத் அவர்கள்
செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீது தகவல் அறியும் சட்டத்தை கையில்
எடுத்ததால் தான் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தங்கள் குழு முடிவுக்கு
வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். வருகின்ற புதன் அன்று அக்குழு இவ்விவகாரம்
தொடர்பாக டெல்லியில் பத்திரிக்கை சந்திப்பை ஒன்றை நடத்த உள்ளது

Similar topics
» தடையை எதிர்கொள்ள ஈரானுக்கு ஆசிய நாடுகள் உதவி
» போலி என்கவுண்டர்:16 வயது சிறுமியின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் இழப்பீடு
» பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பகவத் கீதை: ம.பி.உயர்நீதி மன்றம் அனுமதி!
» இஸ்ரேலால் மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு ஆபத்து?
» 90 கோடி கணிணிகளுக்கு ஆபத்து - மைக்ரோ சாஃப்ட் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum