பாலஸ்தீனத்தை உறுப்பினர் நாடாக அங்கீகரிக்க வேண்டும்: அப்பாஸ் கோரிக்கை
Page 1 of 1

உலகின் 127 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை ஐ.நா தன் உறுப்பு
நாடாக அங்கீகரிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நேற்று
முன்தினம் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.அவருக்குப்
பின் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ தீர்மானங்கள் போடுவதைத்
தவிர்த்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி பாலஸ்தீனத்துக்கு அழைப்பு
விடுத்தார்.
இந்தாண்டுக்கான ஐ.நா பொதுச் சபை கூட்டம் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்து வருகிறது.
இந்தக் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத்
அப்பாஸ் கூறியதாவது: கடந்த 1967க்கு முன்பிருந்த எல்லைகளுடன் கூடிய
பாலஸ்தீன நாட்டை பாதுகாப்புக் கவுன்சில் அங்கீகரிக்க வேண்டும்.
இதுவரை பாலஸ்தீனத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகள் இனிமேலாவது அதை ஒரு நாடாக
ஏற்க வேண்டும். பல ஆண்டுகளாக நாடோடிகளாகத் திரிந்து காலனி ஆதிக்கத்தில்
அவதிப்பட்ட எமது மக்கள் பூமியில் உள்ள மற்றவர்களைப் போல விடுதலை பெற்ற
நிலத்தில் இறையாண்மையோடு வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது.
அப்பாஸ் பேசிக் கொண்டிருந்த போதே பல நாடுகளின் உறுப்பினர்கள் அவரது பேச்சை அங்கீகரித்து எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
இஸ்ரேல் பிடிவாதம்: இதையடுத்து பேசிய இஸ்ரேல் பிரதமர்
பெஞ்சமின் நெடான்யாஹூ,”இஸ்ரேல் அமைதியையே விரும்புகிறது. ஐ.நா.வில்
தீர்மானம் போடுவதால் அந்த அமைதியைக் கொண்டு வர முடியாது.
பேச்சுவார்த்தையின் மூலமாகவே அதை சாதிக்க முடியும்” என்றார்.
பாலஸ்தீன கோரிக்கை குறித்து இருநாட்கள் முன்னர் ஐ.நா பொதுச் சபையில்
பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,”பாலஸ்தீன விடுதலைக்கு குறுக்குவழி
எதுவும் கிடையாது. பேச்சுவார்த்தைகள் மூலமே அது சாத்தியம்” என்று
தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓராண்டுக்குள் இறுதித் தீர்வு: பாலஸ்தீன அதிபர் மற்றம்
இஸ்ரேல் பிரதமர் பேச்சுகளுக்குப் பின் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன்
மற்றும் ஐ.நா ஆகியவை இணைந்து விடுத்த அறிக்கையில்,"இன்னும் ஒரு
மாதத்திற்குள் இருதரப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை துவங்குவது பற்றி
முடிவெடுக்க வேண்டும். எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்து மூன்று
மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் 2012
கடைசிக்குள் ஓர் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளன.
கோரிக்கை தோற்கும்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள
15 நாடுகளில் ஒன்பது நாடுகள் ஒரு நாட்டை அங்கீகரிக்க வேண்டும். அப்படி
அங்கீகரித்த போதும் அமெரிக்கா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள் தங்கள்
மறுப்பாணையை(வீட்டோ) பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஆனால் பாலஸ்தீன கோரிக்கை மீது தனது மறுப்பாணையை பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஒபாமா கூறிவிட்டார்.
அதனால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன கோரிக்கை தோற்கும் என்றே
நிபுணர்கள் கருதுகின்றனர். அதே நேரம் ஐ.நா.வில் தற்போது பார்வையாளர்
அந்தஸ்தில் இருக்கும் பாலஸ்தீனம் பாதுகாப்பு கவுன்சிலில் தன் கோரிக்கை
ஏற்கப்படாத பட்சத்தில் பொதுச் சபையில் விண்ணப்பிக்கும்.
அதில் இடம் பெற்றுள்ள 193 நாடுகளில் 127 நாடுகளின் ஆதரவை பாலஸ்தீனம்
பெற்றிருப்பதால் “நாடு அல்லாத பார்வையாளர்” என்ற அடுத்த நிலை அந்தஸ்தை பெற
முடியும்.

Similar topics
» சஞ்சீவ் பட் சாட்சியாக வேண்டும் – குல்பர்க் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
» காஸாமீதான முற்றுகைக்கு முடிவு வேண்டும்- 21 சர்வதேச அமைப்புகள் கோரிக்கை
» பாரபட்சமான விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை
» சிரிய அரசுடன் எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அரபு லீக் கோரிக்கை
» அப்பாஸ்-மிஷ்அல் நவம்பர் 27-இல் பேச்சுவார்த்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum