தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மோடியிடம் உண்ணாவிரத நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை கேட்கும் குஜராத் ஆளுநர்

Go down

மோடியிடம் உண்ணாவிரத நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை கேட்கும் குஜராத் ஆளுநர்  Empty மோடியிடம் உண்ணாவிரத நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை கேட்கும் குஜராத் ஆளுநர்

Post by முஸ்லிம் Wed Sep 28, 2011 6:08 pm

அகமதாபாத் மோடி தனது பிறந்த நாளான
செப்டம்பர் 17-ல் மதநல்லிணக்கத்திற்காக மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த உண்ணாவிரதம் குஜராத் பல்கலைக்கழக வளாக அரங்கில் பொது நிகழ்ச்சியாக
நடைபெற்றது. இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட செலவு கணக்கை
அளிக்கும்படி கேட்டு ஆளுநர் கமலா பெணிவால் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரின்
கணக்குக் கேட்கும் இக்கடிதம் புதிய சர்ச்சையைக் கிளம்பியுள்ளது.

இதில் நிகழ்ச்சிக்கு உண்டான செலவுகள்,
இந்தச் செலவுகளை செய்ய எவ்வாறு ஒப்புதல் பெறப்பட்டது என்று அவர் கேள்வி
எழுப்பியுள்ளார். இந்தத் தகவலை ஆளுநரின் அலுவலக அதிகாரி ஒருவர்
வெளியிட்டுள்ளார்.

உண்ணாவிரத நிகழ்ச்சிக்காக அரசுப் பணம்
தவறான வழியில் செலவிடப்பட்டது என்று புகார் மனு அளிக்கப்படதன் பேரில்
இந்தக் கடிதத்தைத் தனது முதன்மைச் செயலாளர் அரவிந்த் ஜோஷி மூலம் ஆளுநர்
எழுதியுள்ளார். மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலரிடம் விவரம் கேட்டு
இந்தக் கடிதம் செப்டம்பர் 22-ம் தேதி எழுதப்பட்டுள்ளது.

அண்மையில், குஜராத் மாநில லோக் ஆயுக்தவைத்
தன்னிச்சையாக ஆளுநர் நியமித்ததை முதல்வர் மோடி கடுமையாக விமர்சனம்
செய்துள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கவிழ்க்க
சதி செய்யும் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று மோடி வலியுறுத்தி
வருகிறார்.

இந்த வேளையில் ஆளுநர் எழுதியுள்ள கடிதம்
மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா குஜராத் ஜனதா கட்சித் தலைவர் கோவர்தன் ஜடாபியா என்பவர் அளித்த புகார்
மனுவை ஆதாரமாக வைத்து ஆளுநர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.



மோடியிடம் உண்ணாவிரத நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை கேட்கும் குஜராத் ஆளுநர்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குஜராத்:இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளி​ன் பட்டியல்
» இனப்படுகொலை ஆவணங்கள் அழிப்பு:குஜராத் போலீசிடம் விளக்கம் கேட்கும் நானாவதி கமிஷன்
» குஜராத் கலவர ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன: குஜராத் அரசு பல்டி
» மோடியின் உண்ணாவிரத நாடகத்தால் 100 கோடி விரயம்!
» குஜராத் உள்ளாட்சித்தேர்தல்: காங்கிரஸுக்கு ஏறுமுகம்! மோடிக்கு இறங்குமுகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum