தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது

Go down

பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது  Empty பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது

Post by முஸ்லிம் Thu Sep 29, 2011 4:26 pm

கொல்கத்தா:ரஹீயா காத்துன்,பத்தாம் வகுப்பு
படிக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மாணவி,தன்னுடைய அறிவியல்
கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருதை பெற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் இருந்து “National
Level Exhibition and Project Competition”–ல் பங்கெடுத்த மாநில சாம்பியனாக
இடம் பெற்ற ரஹீயா காத்துன் “INSPIRE Award 2011″-க்கான விருதை பெற்றார்.

பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது  6174672963_b3b5ddf24a-340x244

கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி
இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரதீ௦பா பாட்டிலிடம் இந்த விருதை பெற்ற
இவர், விருதுடன் ரூபாய் பத்தாயிரத்தையும், சான்றிதழையும் பெற்றார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்னும் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு
படிக்கும் இந்த பெண் பார்வையற்றவர்களுக்காக எடை அளவை (Weighing Machine)
கருவியை கண்டுபிடித்துள்ளார்.

பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது  6174673191_47f081b7cf1

இந்த எடை அளவையானது, அளக்கும்போது அளவு
குறைவாக இருந்தால் ஒரு ஒலியையும், அதிகமாக இருந்தால் மற்றொரு ஒலியையும்
மேற்கொள்ளும். இதனால் மளிகைக் கடைகளை, தங்கள் வாழ்வியல் ஆதராமாக கொண்டு
வாழும் பார்வையற்றவர்கள் மற்றவர்களிடம் இருந்து ஏமாறுவதை தடுக்கும்
அளவிலும், அவர்கள் சரியான எடையை நிறுத்து தர எளிதாகவும் இந்த கருவி
வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு வேதியலில் முதுகலை பட்டதாரியான
அவரது தலைமை ஆசிரியர் கம்ருத் ஜமான் மற்றும் அவரது பள்ளி ஆசிரியர்களும்
உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ரஹீயா காத்துன், பிர்பும்
மாவட்டத்தில், போல்பூர் காவல்துறையின் கீழ் உள்ள மஹிதாபுரா மிர்ஜபரா
என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவரது தந்தை ஷேக் மக்புல் மற்றும் தாய்
நபிஷா பிபீ படிப்பறிவற்றவர்களாக இருக்கும் இவர்கள், விவசாய தொழில் செய்து
வருகின்றனர். எட்டு பிள்ளைகளை கொண்ட இவர்களுக்கு ரஹீயா காத்துன் மூன்றாவது
பெண்ணாவார்.

பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது  6174672765_4b6a1c81341

மண் குடிசையில் வாழும் இவர்களின்
வீட்டிற்கு மின் விளக்கு கூட இல்லாத நிலையில் அக்கம் பக்கத்தினர்
இவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இவள் படிப்பிற்கு உதவி உள்ளனர்.

பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது  6175199766_3cf7aff80d1

ரஹீயாவுக்கு முன் உள்ள இரண்டு சகோதரிகள்
தங்களது எட்டாம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு, தனது குடும்ப
சூழ்நிலைக்காக வயல் வெளியில் வேலை பார்த்து வருவதாக ரஹீயா தெரிவித்தார்.

அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமும்,
ரஹீயாவை உயர் படிப்பிற்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றனர்.
அவர்களின் தலைமுறையில் ரஹீயாவே படிப்பறிவு பெற்ற முதல் பெண்மணியும்,
பத்தாம் வகுப்பு வரை படித்த முதல் பெண்ணுமாவர். இப்பொழுது பதினொன்றாம்
வகுப்பை தொடரும் ரஹீயா பத்தாம் வகுப்பில் வாழ்க்கை அறிவியலில் அதிக
மதிப்பெண் பெற்ற அவரை, அவரது தலைமை ஆசிரியர் அறிவியல் பாடத்தில் அவரது உயர்
படிப்பை தொடங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ரஹீயாவின் குடும்ப
வறுமை காரணமாக அவர் ஆர்ட்ஸ் பாடத்தை தொடர்ந்து உள்ளார்.

மேலும் ஊடத்திற்கு பேட்டியளித்த ரஹீயா
தெரிவித்தது. “மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எப்பொழுதும்
பள்ளியின் உயர் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிப்பார்.
அதனால் நானும் முதலமைச்சர் எனக்கு தகுந்த விருதை வழங்கி, என்னுடைய உயர்
படிப்பிற்கு உதவி தொகை வழங்குவார் என்று நம்புகிறேன். அப்படி என்னை
முதலமைச்சர் அழைத்தால் நான் என் குடும்ப நிலையையும், வறுமையிலும் எவ்வாறு
படிக்கிறேன் என்ற சூழ்நிலையையும் எடுத்து உரைப்பேன்” என்றும்
தெரிவித்துள்ளார்.

ஆனால் மேற்கு வங்காளத்தின்
சிறுபான்மையினர் வாரியத்திடம் இருந்து அவருக்கு எவ்வித சலுகைகளும்
கிடைப்பதில்லை என்று தெரிவித்து இருந்தார். ரஹீயா மனம் நொந்து கூறிய விஷயம்
என்னவென்றால் மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக அறிவியலில் திறமையை
காட்டிய முதல் பெண்மணி, ஆனால் இதுவரை மேற்கு வங்காளத்தின் கல்வி வாரியம்
இவருக்கு இது வரை ஒரு பாராட்டோ அல்லது பரிசோ வழங்கவில்லை என்பது தான்.

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இருந்து
அழைப்பு வந்த ரஹீயாவுக்கு இதுவரை தனது சொந்த மாநிலத்தில் இருந்து அழைப்பு
வராதது மிக்க வேதனை தரக் கூடிய விஷயம் தான்.
பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இளம் வயதில் மைக்ரோஸாஃப்ட் விருது பெற்ற பெண் பொறியாளர் மரணம்!
» கலீஃபா உமர் வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாடமி விருது
» பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – பாப்புலர்ஃப்ரண்ட்
» மத்தியபிரதேசம்:இன்று சூரிய நமஸ்காரம் செய்ய பள்ளி மாணவர்களுக்கு பா.ஜ.க அரசு நிர்பந்தம் – கடும் எதிர்ப்பு
» இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum