இளம் வயதில் மைக்ரோஸாஃப்ட் விருது பெற்ற பெண் பொறியாளர் மரணம்!
Page 1 of 1

மிக இளம் வயதில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் தொழில்ரீதியான விருது பெற்ற உலகின் இளம் வயது பெண் கணினி பொறியாளர் மரணமடைந்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி அர்ஃபா கரீம்
ராந்தவா. தற்போது 16 வயதான இவர் கடந்த 2004-ம் ஆண்டு எம்.சி.பி. எனப்படும்
மைக்ரோஸாஃப்ட் சான்று விருதினைப் பெற்று சாதனை படைத்தவராவார். இந்த
விருதினைப் பெறும்போது அவருக்கு வெறும் 9 வயது மட்டுமே!
அந்த வயதிலேயே மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின்
தலைவர் பில்கேட்ஸ் இவரைத் தன் நிறுவனத்துக்கு நேரடியாக அழைத்து விருது
வழங்கி கவுரவித்தார். இதன் மூலம் உலகில் தொழில்ரீதியான முறையில்
மைக்ரோஸாஃப்ட் விருதினை மிக இளம் வயதில் பெற்ற முதல் சிறுமி என்ற பெயர்
சிறுமி அர்ஃபா கரீமுக்குக் கிடைத்தது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
22 -ம் தேதி திடீரென அர்ஃபா கரீம் ராந்தவாவுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து லாகூர் ராணுவ மருத்துவமனையி்ல் அர்ஃபா கரீம்
சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிட்சையில் முன்னேற்றம் ஏற்படாததைத்
தொடர்ந்து கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர
சிகிச்சைப்பிரிவில் அர்ஃபா சேர்க்கப்பட்டார்.
அங்கும் தொடர் சிகிட்சையில் எந்த
முன்னேற்றமுமின்றி அவரது மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் குறைய
ஆரம்பித்தது. தொடர்ந்து கடந்த சனிகிழமையன்று(14/01/2012) மரணமடைந்தார்.
அவரது மறைவிற்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் யூசுப் ராஸா கிலானி
ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று சிறுமி அர்ஃபாவின் உடலுக்கு இறுதி
சடங்குகள் நடக்கின்றன. இதில் பஞ்சாப் மாகாண முதல்வர் ஷபாஸ் ஷெரீப் உள்பட
பலர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது
» ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார்!
» பலஸ்தீன் இளம் தாய் கைது- ஆக்கிரமிப்புப் படையின் அடாவடி
» இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது
» சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு-ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum