பாகிஸ்தானில் நான்கு அமெரிக்க உளவாளிகள் கைது
Page 1 of 1

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நான்கு அமெரிக்க உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான பஞ்சாபில் வைத்து அமெரிக்க உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக ப்ரஸ் டி.வி கூறுகிறது.
பஞ்சாபின் ஜெஹ்லுமில் ராணுவ மையத்திற்கு
அருகே சுற்றிக்கொண்டிருந்த இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைது
செய்யப்பட்டனர். ஆனால், இதுக்குறித்து பாகிஸ்தானோ அமெரிக்காவோ
அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை.
இவ்வாண்டு பிப்ரவரியில் இரண்டு
பாகிஸ்தானியர்களை கொலைச் செய்த அமெரிக்க உளவாளி ரேமண்ட் டேவிஸை பாகிஸ்தான்
போலீஸ் கைது செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளின் உறவில் விரிசல்
ஏற்பட்டது. இவ்விரிசல் இதுவரை சீர் செய்யப்படவில்லை. இதற்கிடையே இப்புதிய
சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு
போதிய இழப்பீட்டை வழங்கிய பின்னரே டேவிஸை பாகிஸ்தான் விடுவித்தது. கடந்த
ஜூன் மாதம் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் பயணம் செய்ய அரசு
தடை விதித்திருந்தது. தலைநகரை விட்டு வெளியேற எதிர்ப்பில்லா
சான்றிதழ்(என்.ஒ.சி) தேவை என அமெரிக்க அதிகாரிகளுக்கு கட்டளையிடப்பட்டது.
அத்தியாவசியமான ஆவணங்கள் இல்லாமல் பாகிஸ்தான் முழுவதும் சுற்றித்திரியும்
அமெரிக்க தூதரக பிரதிநிதிகளில் பெரும்பாலோர் சி.ஐ.ஏ உளவாளிகள் என
குற்றச்சாட்டு எழுந்தது.

Similar topics
» ஈரானில் 12 சி.ஐ.ஏ உளவாளிகள் கைது
» பாகிஸ்தானில் பிரம்மாண்ட அமெரிக்க எதிர்ப்பு பேரணி
» அமெரிக்க அதிகாரிக்கு பாகிஸ்தானில் நுழைய அனுமதி மறுப்பு
» அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் நான்கு பேர் கைது
» பாகிஸ்தானில் பி.பி.சி செய்தி சேனலுக்கு தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum