உ.பி தேர்தல்:பா.ஜ.கவின் முக்கிய அஜண்டா ராமர் கோவில்
Page 1 of 1
உ.பி தேர்தல்:பா.ஜ.கவின் முக்கிய அஜண்டா ராமர் கோவில்
புதுடெல்லி:உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் முக்கிய அஜண்டா ராமர் கோவில் கட்டுவதுதான் என்பது உறுதியாகியுள்ளது.
மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டு
யாத்திரைகள் அயோத்தியில் சென்று அடையும் எனவும், அங்குவைத்து தலைவர்கள்
வெற்றிக்காக முயல்வோம் என உறுதிமொழி எடுப்பார்கள் என பா.ஜ.க
அறிவித்துள்ளது.
ஊழலுக்கு எதிராகவும், உ.பியில் நடக்கும்
வன்முறைகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்டும் ஜனஸ்வாபிமான் யாத்திரா இம்மாதம்
13-ஆம் தேதி வாராணாசியிலிருந்தும், மதுராவிலிருந்தும் துவங்கும் என
கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
மதுராவிலிருந்து துவங்கும் யாத்திரைக்கு
கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார்.
வாராணாசியிலிருந்து துவங்கும் யாத்திரைக்கு கல்ராஜ் மிஷ்ரா தலைமை
தாங்குகிறார்.
வாராணசியிலிருந்து துவங்கும் யாத்திரையை
கொடி அசைத்து துவக்கி வைக்கிறார் எல்.கே.அத்வானி. வருகிற நவம்பர் 16,17
தேதிகளில் இரு யாத்திரைகளும் அயோத்தியை சென்று அடையும். அங்குவைத்து
உறுதிமொழிக்கான நிகழ்ச்சி நடைபெறும்.
5000 கிலோமீட்டர் தொலைவைக் கொண்ட இந்த
யாத்திரை 62 மாவட்டங்கள், 37 சட்டமன்ற தொகுதிகளை கடந்து செல்லும். பாப்ரி
மஸ்ஜிதை மூன்றாக பங்குவைக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை வைத்து
முடிந்தவரை ஆதாயம் தேட தீர்மானித்துள்ளதாக பா.ஜ.க தொடர்புடைய வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமர் பிறந்த இடம் என
வெளிப்படுத்துவதுதான் நீதிமன்ற தீர்ப்பு எனவும் 2012 சட்டமன்ற தேர்தலில்
முக்கிய அஜண்டாவாக இதனை உயர்த்தி பிடிப்போம் என அத்வானி முன்னரே
தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு
» பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் உள்ள கோவில் இடிப்பு!
» செக்ஸ் நோய்கள் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக்கும் முக்கிய காரணம்!
» சொஹ்ரபுதீன் ஷேக்:தப்பிச்சென்ற முக்கிய சாட்சி கைது!
» தொடரும் ஆக்கிரமிப்பு போராட்டங்கள்: முக்கிய நகரங்களில் பலர் கைது
» பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் உள்ள கோவில் இடிப்பு!
» செக்ஸ் நோய்கள் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக்கும் முக்கிய காரணம்!
» சொஹ்ரபுதீன் ஷேக்:தப்பிச்சென்ற முக்கிய சாட்சி கைது!
» தொடரும் ஆக்கிரமிப்பு போராட்டங்கள்: முக்கிய நகரங்களில் பலர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum