அத்வானியின் 38 நாள் ரத யாத்திரை தொடங்கியது!
Page 1 of 1

பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுள் ஒருவரான அத்வானியின் மற்றுமொரு ரதயாத்திரை இன்று தொடங்கியது.
மறைந்த தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனின்
சொந்த ஊரான உ.பி - பீகார் எல்லையிலுள்ள சிதாப்தியாரா என்னும் கிராமத்தில்,
பீகார் முதல்வர் நித்தீஷ் குமார் கொடி அசைத்து இந்த ரதயாத்திரையை
தொடங்கிவைத்தார். இந்த யாத்திரை வழி நாட்டின் நூறு மாவட்டங்களைக் கடந்து
செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக -வின் நாடாளுமன்றத் தலைவர்கள் சுஷ்மா
சுவராஜும் அருண் ஜெட்லியும் அத்வானியுடன் வந்தனர். டெல்லியிலிருந்து
தனியார் விமானத்தில் பாட்னா வந்த அவர்கள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம்
சிதாப்தியாரா சிற்றூர் சென்றடைந்தனர்.
தொடக்கத்தில் சாப்ராவில் ஒரு
பொதுக்கூட்டத்தில் பேசும் அத்வானி, அங்கிருந்து சாலை மார்க்கமாகச் சென்று
பாட்னா பேரணி ஒன்றில் பங்கேற்கிறார்.
தினமும் காலை பத்து மணிக்குத்
தொடங்கி இரவு பத்து மணிக்கு முடிவடையும் யாத்திரையின் பேசு பொருள்களாக
ஊழல், கறுப்புப் பண விவகாரம், பயங்கரவாதம், விலைவாசி இருக்கும் என பாஜக
தெரிவித்துள்ளது.
சுமார் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்கள் வழியாக 12,000 கி.மீ பயணித்து நவம்பர் 20 அன்று டெல்லியில்
யாத்திரையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஊழலுக்கு எதிரான அத்வானியின் யாத்திரையைக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
"பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் தலை
விரித்தாடுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் பாஜக முதல்வர்களே பதவியிறங்கும்
காட்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், ஊழலுக்கு எதிராக பேச பாஜகவுக்கு என்ன
அருகதையுள்ளது?" என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளதோடு, "இது அரசியல்
நாடகம். வெறும் யாத்திரைகளால் ஊழலை ஒழித்துவிட முடியாது" என்றும் காங்கிரஸ்
கூறியுள்ளது.
இந்நேரம்

Similar topics
» ஜனசேதனா யாத்திரை:அத்வானியின் பெங்களூர் பேரணி ரத்து
» அத்வானியின் யாத்திரை தீவிரவாதத்தின் பிறப்பு - திக்விஜய் சிங்
» காணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது
» அத்வானியின் ரதயாத்திரை ஒரு ஏமாற்று வேலை! அன்னா ஹசாரே
» ஒரு நாள் தொழுகை !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum