அத்வானியின் யாத்திரை தீவிரவாதத்தின் பிறப்பு - திக்விஜய் சிங்
Page 1 of 1

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பொதுச்செயலாளருமான திக்விஜய் சிங் ஹிந்துத்வா அமைப்புகளை மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நாஜிகளுடன் ஒப்பிட்டுள்ள அவர் இந்தியாவில் தீவிரவாதத்தின் வேராக விளங்கியது அத்வானியின் ரத யாத்திரைதான் என சாடியுள்ளார்.
ஹிட்லரின் நாஜிக்கள் எவ்வாறு 1930 ஆம் ஆண்டுகளில் யூதர்களைத் தாக்கினார்களோ அதுபோல் ஆர்எஸ்எஸ் இயக்கமும் தேசியவாதம் என்ற பெயரில் முஸ்லிம்களை குறி வைத்துள்ளது என திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது தொண்டர்களை அரசு அலுவலகங்கள், காவல்துறை மற்றும் ராணுவத்தில் ஊடுறுவச் செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பில் இரண்டு ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டிருப்பதிலிருந்து ராணுவத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளையும் தங்கள் வசம் வைத்திருப்பது ஊர்ஜிதமாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிசு மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை உருவாக்கி இளந்தலைமுறையினரிடம் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வை விதைப்பதாக குற்றம் சாட்டியுள்ள திக்விஜய் சிங் இந்த பள்ளிக்கூடங்கள் நாம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய அபாயம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸின் 83 வது கூட்டத்தில் பேசிய அவர் அத்வானியின் ரத யாத்திரைதான் இந்தியாவில் தீவிரவாதம் பிறப்பதற்கான முழு முதற் காரணம் என தெரிவித்தார். அந்த ரத யாத்திரை மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது என குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் அதனுடைய சார்ந்த அமைப்பான ஆர்எஸ்எஸ் போன்றவற்றின் மூலம் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை இந்தியாவை பிளவுபடுத்த முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நேரம்

Similar topics
» அத்வானியின் 38 நாள் ரத யாத்திரை தொடங்கியது!
» ஜனசேதனா யாத்திரை:அத்வானியின் பெங்களூர் பேரணி ரத்து
» எடியூரப்பா பற்றிய கேள்விகளை தவிர்க்கவே அன்னாவின் மெளனவிரதம் : திக்விஜய் சிங்
» ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்
» ஹசாரேக்கு ஆதரவு என மோகன் பகவத் – இல்லை என ஹசாரே மறுப்பு – உண்மை வெளிவந்தது என திக்விஜய் சிங்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum