ஆப்கானில் சிறைக்கைதிகளுக்கு கொடூரமான சித்திரவதைகள் – ஐ.நா
Page 1 of 1

ஐ.நா:ஆப்கானிஸ்தானில் ரகசிய புலனாய்வு குழுக்கள் சிறைக் கைதிகளை கொடூரமான சித்திரவதைகளை செய்வதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.
குற்றத்தை ஒப்புக்கொள்ளவும், தகவல்களை சேகரிக்கவும் ஆப்கானின் ஐந்து சிறைகளில் கொடூரமான சித்திரவதைகளை அதிகாரிகள் உபயோகிக்கின்றனர்.
மின்சார அதிர்ச்சி அளித்தல், வன்புணர்வு
செய்வதாக மிரட்டுதல், மர்ம உறுப்புகளில் தாக்குவது, மேலே கட்டிப்போட்டு
அடித்தல், கால்விரலின் நகத்தை பிடுங்குதல் போன்ற சித்திரவதை முறைகளை
கையாளுகின்றனர். குழந்தைகள் உள்பட இத்தகைய சித்திரவதைகளுக்கு ஆளாகுவதாக
ஐ.நாவின் அஸிஸ்டண்ட் மிஷன் தயார் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதனை ஆப்கான் ரகசிய புலனாய்வு ஏஜன்சி மறுத்துள்ளது.
நேசனல் டைரக்ட்ரேட்
செக்யூரிட்டி(என்.டி.எஸ்) புலனாய்வு ஏஜன்சியின் ஹெரத், காந்தஹார், கோஸ்த்,
லக்மான், காபூலில் அதன் தலைமையகம் ஆகிய இடங்களில் சித்திரவதைகள்
அரங்கேறுகின்றன. 2010 அக்டோபர் முதல் 2011 ஆகஸ்ட் வரை 47 சிறைகளில்
அடைக்கப்பட்டிருந்த 379 சிறைக்கைதிகளிடம் நடத்திய நேர்முகத்தில் இது
தெரியவந்தது. சித்திரவதைகள் நடப்பது தங்களுக்கு தெரியும் என ஆப்கானின்
நேட்டொ செய்தித் தொடர்பாளர் கார்ல்ஸன் ஜேக்கப்ஸன் தெரிவித்துள்ளார்.
‘எல்லா சிறைகளிலும் சித்திரவதைகள் நடப்பதில்லை. ஆகையால்தான் நேட்டோவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைக் கைதிகளை ஆப்கான் ரகசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கிறோம்.’ என கார்ல்ஸன் கூறுகிறார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum