பிரஷாந்த் பூஷன் தாக்குதல்: மேலும் இருவர் கைது
Page 1 of 1

மூத்த
வழக்கறிஞரும், அண்ணா ஹஜாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரஷாந்த் பூஷனை
தாக்கிவிட்டு தப்பிச் சென்ற இரண்டு இளைஞர்களை டெல்லி காவல்துறை இன்று கைது
செய்தது.
தேஜிந்தர் சிங் பக்கா, விஷ்ணு குப்தா என்ற அவ்விரு இளைஞர்களும், அதிகம்
அறியப்படாத 'பகத் சிங் கிராந்தி சேனா' என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
என்பது தெரியவந்ததுள்ளது.
ஒரு வீட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்ட இவ்விருவரின் மீதும்
கிரிமினல் தாக்குதல், குற்றச்சதி மற்றும் அத்துமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
பிரஷாந்த் பூஷனுக்கு உதை..
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தனது அலுவலக அறையில் நேற்று பிற்பகல்
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த பிரசாந்த்
பூஷனை இளைஞர்கள் மூவர் அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினர். தொலைக்காட்சி
சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட அந்தக் காட்சிகள் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
இதில், இந்தர் வர்மா (வயது 24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். டெல்லியை
அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த அவர், ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பின் டெல்லி
நகர தலைவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. தப்பிச்சென்ற இரு இளைஞர்களும்
'பகத் சிங் கிராந்தி சேனா' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.
காஷ்மீர் பிரச்னையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை
தெரிவித்ததால், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய பிரஷாந்த் பூஷன்,
ஸ்ரீராம் சேனா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பிரசாந்த் பூஷன் மீது நடந்த தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். அண்ணா ஹஜாரே குழு, காங்கிரஸ், பிஜேபி,
இடதுசாரிகளை சேர்ந்த தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பிஜேபிக்கு தொடர்பில்லை: அத்வானி
பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களில் ஒருவரான தேஜிந்தேர் சிங் பக்கா என்பவர்,
பிஜேபி இளைஞர் அமைப்பில் முன்னாள் உறுப்பினர் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால், பூஷன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பிஜேபி மூத்த
தலைவர் அத்வானி, "எந்தவித வன்முறை செயலாக இருந்தாலும் அது வன்மையாக
கண்டிக்கத்தக்கது. தாக்குதல் ந்டத்தியவர்களுக்கும் சங்க் பரிவார்
அமைப்புக்கோ, பிஜேபிக்கோ எந்தவித தொடர்பும் இல்லை," என்று மறுப்பு
வெளியிட்டுள்ளார்.

Similar topics
» ஃபலஸ்தீன்:இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது – மேலும் ஒருவர் மரணம்
» 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!
» தீவிரவாத குழுவின் பெயரில் மின்னஞ்சல்! மேலும் ஒருவர் கைது
» அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் நான்கு பேர் கைது
» இந்தியாவில் காவல்துறை மத சார்பாக உள்ளது : பிரசாந்த் பூஷன் குமுறல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum